Jul 25, 2010

தில்லாலங்கடி




சிம்பிளாக விமர்சிக்க வேண்டுமென்றால் "லாஜிக்" ஏதும் இல்லாத ஜாலியான ஒரு "பார்க்கலாம்" ரகப்படம் தில்லாலங்கடி.

படத்தை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?

 - "சொல் பேச்சுக் கேட்காத சுந்தரியே" பாடல். இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதத்திற்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர்க்கும் ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

 - படம் நெடுக வரும் காமெடி அட்டகாசங்கள். முன் பாதியில் வடிவேலுவின் முழுமையான ராஜ்ஜியம். மன்சூரலிகான் கூட்டணியில் வடிவேலு செய்யும் அலம்பல்களில் தியேட்டரே எழுந்து குதிக்கிறது. பின்னர் வரும் "பிறந்தமேனியா" காமெடியும் "நச்". பின் பாதியில் பாதியை சந்தானம் குத்தகைக்கு எடுத்து கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்.

இவற்றைத் தாண்டிப் படத்தைப் பார்த்தோமென்றால்.....

செய்வது எதுவாயிருந்தாலும் அதில் ஒரு கிக் இருக்கணும் அப்போதுதான் அதைக் கையில் எடுப்பேன் என்னும் ரகம் ஜெயம் ரவி. மனிதர் அம்சமாக இருக்கிறார், நன்றாகத்தான் நடிக்கிறார், சேஷ்டைகள் செய்கிறார், வெடித்துச் சிரிக்கும்போது கொஞ்சம் செயற்கையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். எதிலும் சீரியஸ்னஸ் இல்லாத ஒரு டிபிகல் "2010" இளைஞன். ஆனால் வரிக்கு வரி "எனக்கு கிக் வேணும் கிக் வேணும்" என்று கடுப்பெத்துவதை தவிர்த்திருக்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு ஓங்கி ஒரு கிக் விட வேண்டும் போல இருக்கிறது.

அயன், படிக்காதவன், சுறா வரிசையில் வழக்கமான அச்சுபிச்சு தமன்னா. ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்றால் அரை ஆடையில் வரும் ஹீரோயின்கள் யார் என யாரேனும் இலக்கண விளக்கம் கொடுத்தால் தேவலை. காவல் நிலையம் செல்லும்போதும் கூட  நம்ம ஹீரோயினிக்கள் அரைகுறை ஆடையில்தான் போவேன் என அடம் பிடிக்கிறார்கள். நம்ம ஊர்ல சப்ஜி செஞ்சுட மாட்டாங்க?

எனக்கு உன்னை புடிச்சிருக்கு, நான் உன்னைக் காதலிக்கலை, என்னைப் பார்த்து ஐ லவ் யு சொல்லு, அய்யய்யோ அது காதல் இல்லை, ஐ லவ் யு, ஐ ஹேட் யு....இப்படி வகை வகையாய் ஹீரோவும் ஹீரோயினும் மாறிமாறிப் பேசி நம்மையும் குழப்பி எடுக்கிறார்கள். இப்போ என்னதாண்டா சொல்ல வர்றீங்க என தியேட்டரில் குரல் கேட்கிறது.

ஷாம் தில்லாலங்கடியில் "போலீஸ் ஆபீசர்" அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் சூப்பர் ஒரு சில இடங்களில் க்ளிஷே காமெடிக்கள் என நன்றாகத்தான் இருக்கிறது அவர் ரோல். Welcome back ஷாம்.

படத்தில் மேலும் பிரபு, சுகாசினி, ராதாரவி, நளினி, கஞ்சாகருப்பு, மயில்சாமி, சத்தியன், மனோபாலா, லிவிங்க்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

மொத்தத்தில், தில்லாலங்கடி ஒரு ஓகே வகை என்டர்டெய்னர்.

கடைசியாக:

ஏதேனும் சூளுரைத்துவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து போகும் ஹீரோ, ஹீரோயின்,போலீஸ் ஆபிசர்கள்;  ராபின்ஹூட்  தனமாக இங்கு அடித்து அங்கு கொடுக்கும் ஹீரோ; மலேசியா என்றாலே காட்சிக்குக் காட்சி இரட்டை கோபுரப் பின்னணிகள் என வழக்கமான பார்முலாக்களைத் தவிர்த்து..... புதுசா....புதுசா.....ஏதாவது சொல்லியிருந்தால் இன்னும் கிக் இருந்திருக்கும்.


7 comments:

Sri said...

// ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்றால் அரை ஆடையில் வரும் ஹீரோயின்கள் யார் என யாரேனும் இலக்கண விளக்கம் கொடுத்தால் தேவலை //

ha ha...good one...

Anonymous said...

தமன்னாவின் ஆடை குறித்த உங்கள் குறிப்புகளை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.

Anonymous said...

தமன்னாவின் ஆடை குறித்த உங்கள் குறிப்புகளை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்.

Giri Ramasubramanian said...

@ Sri

Thanks for your visit and comments.

@ அனானி

உங்கள் கண்டிப்புகளை ஏற்றுக் கொள்கிறேன். ஆனா, அகில உலக தமன்னா ரசிகர் மன்றத் தலைவருக்குப் பேர் சொல்லிக்க என்ன வெக்கம்?

Breeze said...

Giri, it's really pants. I am not talking about logic but even comedy hardly makes people laugh. samma mokai moive. When I came out, I felt like I was in theatre for the whole day

Giri Ramasubramanian said...

@ Breeze...

ha hah haa.... to some extent I agree with you. But I liked some of the aspects in the movie, I hightlighted them.

Unknown said...

kaari thoopura padam

Related Posts Plugin for WordPress, Blogger...