Jul 30, 2010

எந்திரன் - எளிமையின் திருவுருவம்

இன்னமும் ஒரேயொரு நாள்தான் இருக்கிறது. தமிழகமே தயாராகு எந்திரன் இசையைக் கேட்க என பதிவர் உலகத்தில் ஒரு கூட்டமே கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதால்..... அந்த சப்ஜெக்டை அவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு.......
(அதுக்குன்னு அப்படியே விட்டுடறதா இல்லை, நாளைக்கு சுடச்சுட இசை விமரிசனம் உண்டுங்கோவ்).......சில மாதங்களுக்கு முன், எந்திரன் படத்தின் கடைசிக் கட்ட பேட்ச் (patch) வேலைகள் சிலவற்றை முடிக்க சூப்பர் ஸ்டார் அவர்கள் சென்னையில் உள்ள அனிமேஷன் / கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றுக்கு திக்விஜயம் புரிந்திருந்தார்.

அந்த அனிமேஷன் நிறுவனத்தின் திருவனந்தபுர அலுவலகத்தில் பணிபுரியும் என் தம்பி அருண் அந்த ப்ராஜெக்ட் தொடர்பான வேலையாக வந்திருக்க, அதிஷ்டவசமாக சூப்பர்ஸ்டார் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியுள்ளது.

வழக்கமான பெரிய மனிதர்களின் எளிமை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். எளிமையாக வாழ்வதை ஒரு விளம்பர உத்தியாகக் கையாள்பவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு எளிமையாக வாழ்வதே ஒரு பந்தா நிறைந்த செயல். ஆனால் அப்படியல்ல ரஜினியின் எளிமை. அது நிஜமான மற்றும் மெய்மறக்கச் செய்யும் ஒன்று என்கிறான் என் சகோதரன். அவனால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை, தான் சந்தித்தது ரஜினியைத்தானா என்று.

தான் அங்கு வந்த வேலையை தனக்கே உரிய நேர்த்தியுடன் முடித்துவிட்டு மிகவும் hi-fi விஷயங்களாக அல்லாமல், அங்கிருந்த இளைஞர்களுடன் மிக எளிமையாக உரையாடிவிட்டு மீண்டும் தனக்கே உரிய விடுவிடு வேகத்துடன் அங்கிருந்து புறப்பட்டாராம் ரஜினிகாந்த்.

ரஜினி அங்கு இருந்த அனிமேஷன் செய்யும் இளைஞர்களிடம் கேட்ட சில கேள்விகள்,

"நீங்க சாப்பாடு தூக்கம் இல்லாம வேலை செய்வீங்களாமே , நிஜமா?"

"இப்போ நீங்க எல்லாரும் சாப்டுட்டீங்களா?"

"ஒழுங்கா நேரத்துக்குத் தூங்கறீங்களா?"

போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டவுடன், "வொய்  நாட்!" என்ற பதிலுடன் தன்னருகில் தயங்கித் தயங்கி வந்தவர்களை குதூகலமாக அணைத்தவாறே போஸ் கொடுத்தாராம் பாருங்கள்.... மல்லு இளைஞர்கள் அனைவரும் மயங்கி விட்டார்களாம்.

அவர்கிட்ட கத்துக்க நமக்கு நெறைய இருக்கு சாமி.....

தொடர்புடைய இடுகை: எந்திரன் தகவல்கள்
.
.
.

.

5 comments:

Anonymous said...

You Rajini fans....stop this non sense!!!
He is just another human being, why do you worship like god.

கிரி said...

hey hey....
Mr or Ms Anonymous....
first of all thanks for your comments.

Pls note that I am not at all a Rajini fan. I hardly liked four or five movies in his entire career.

But, I like him as a nice human being. His simplicity, being neutral when required (you may call it he is confusing - but I don't see it that way), and lot more.

I do not worship him, it's my mallu brother who is a Lalettan fan praises Rajini for his simplicity.

RAJINI BAKTHAN said...

v never even u dnt believe tis...he s god for tamilnadu n atleast a demi god for rest f india...bcoz f him many families r surviving...lots f trusts r depending on him for help...a man f genuineness...simplicity...honest...vry soft..kind..wat u cal a man wit these qualities???
tat's GOD..got it...??

hereaftr dnt giv such __________ comments...

Anonymous said...

he is good man

Deepak The Boss said...

SuperStar is the only actor who never acts behind the camera !!!

Mr.Giri Thanks a Lot for sharing this...

Related Posts Plugin for WordPress, Blogger...