Jul 10, 2010

பால் என்ற நாஸ்ட்ரடாமஸ்




இந்தமுறை உலகக்கோப்பை ஆட்டங்களின் விறுவிறுப்பிற்கு இணையாக கதைக்கப்பட்டு வரும் மற்றுமோர் விஷயம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பால் ஆக்டோபஸ் சொல்லும் ஜோசிய ஜோக்குகள்.

இங்கே நான் சொல்லும் விஷயங்கள் உங்களுக்கு முன்னமே தெரியுமா எனப் பாருங்கள்!

ஆக்டோபஸ் ஏன்?
நம்மூரில் கிளி போல அவர்கள் ஊரில் ஆக்டோபஸ் ஜோசியம் நம்பப்படும்  காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆக்டோபஸ்'சுக்கு மூன்று இதயங்களும் (யப்பாடி) அதைச் சார்ந்து ஒன்பது மூளைகளும் (யம்மாடி) இருப்பதுதான்.

பால் பற்றி:

பால் இருப்பது ஜெர்மனி நாட்டில், ஆனால் அவன் பிறந்தது இங்கிலாந்தில். அடடா! ப்ரீ-குவாட்டர்ஸ்ல பொறந்த நாட்டுக்கு எதிராவே தீர்ப்பு சொல்லிட்டியே நாட்டாமை.

போய் லான்ஸ் (Boy Lornse)  எழுதிய டேர்  டின்ட்டேபிச்  பால் ஒக்டோபஸ் (Der Tintenfisch Paul Oktopus) என்னும் குழந்தைகள் புத்தகம்தான் நம்ம "பால்" சாருக்கு பெயர் தந்தது.

உங்க பேர்ல ட்விட்டர் அக்கௌன்ட் இருக்கா? பால் பேர்ல ரெண்டு இருக்கு சார். (http://twitter.com/PsychicOctopus + http://twitter.com/PPsychicOctopus)

மத்த விஷயங்கள் நீங்க அவனைப்பத்தி நல்லாவே கேள்விப்பட்டதே. மேலும் அவனைப்பற்றி வாசிக்க: டென் திங்க்ஸ் / விக்கியில் பால்

நாளைக்கு இறுதிப் போட்டியில ஸ்பெயின் ஜெயிக்கப் போறதா சொல்லியிருக்காரு இந்த உலகக் கோப்பை ஹீரோ. ஸ்பெயின் ஜெயிச்சிட்டா கிட்டத்தட்ட அந்த கோல்டன் பூட்டுக்கு சமமா  பாலுக்குத் ஏதேனும் விருது தரப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
.
.
. image courtesy: examiner.com
Related Posts Plugin for WordPress, Blogger...