Jul 7, 2010

வடசென்னை வரவேற்பு – 1

நண்பர் நட்பாஸ் அவர்களின் தளத்தில் நான் எழுதிய இந்த "சிறப்புப் பதிவு" இங்கே உங்களுக்காக:
___________________

(இந்தப் பதிவுக்குப் பெரிசா பில்ட் அப்பெல்லாம் கொடுக்கப் போவதில்லை- தென் சென்னை வாசியான எனக்கு வட சென்னை குறித்து எதுவும் தெரியாது: தெரிந்ததெல்லாம் ஊடகங்கள் வாயிலாக அரசால் புரசலாக அது எதோ ஜிம்பாப்வே ரேஞ்சுக்கு ஏழ்மையும் கொலை கொள்ளை பட்டினி கற்பழிப்பு போன்ற நிகழ்வுகள் பரவலாக இருக்கிற சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருக்கிற- வீணாய்ப்போன வட்டாரம் என்ற இமேஜ்தான். அது அப்படியில்லை என்று அந்த போலி பிம்பத்தை, மாய கருத்துருவை கலைக்க வருகிறார் நண்பர் கிரி):
- நட்பாஸ்.
________________

அமெரிக்காவில் இருப்பவனுக்கு அமெரிக்கா தவிர்த்து ஒன்றும் தெரியாது என்பார்கள். அதே போல சென்னையில் பிறந்து வளர்ந்த பெரும்பாலானவர்களுக்கு தாம்பரம் தாண்டியும் தமிழகம் இருப்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் சென்னைக்கு வெளியே எல்லாமே “ஊர்”தான். ஊரான், ஊர்நாட்டான் என்றே சென்னை அல்லாத ஊரைச் சேர்ந்தவர்களை இங்கே விளிக்கிறார்கள்.
வடசென்னை மற்றும் வடசென்னை மக்கள் குறித்து இந்த உலகம் கொண்டிருக்கும் பார்வையும் அதே போல்தான், ரொம்பவும் வித்தியாசமானது. இங்கிருக்கும் சாலைகள் போலவே இங்கிருக்கும் மக்களும் கரடுமுரடானவர்கள் எனவே பார்க்கப்படுகிறார்கள்.
வடசென்னையில் இருபது வருடங்கள் வளர்ந்தவன் என்கிற முறையிலும், typical-ஆக அடித்தட்டு வடசென்னைவாசிகளுடன் குறைந்தது பத்து வருடகாலம் வளர்ந்தவன் என்கிற முறையிலும், வடசென்னை மக்களின் அழகான, அன்பான இதயங்கள் குறித்த பதிவு ஒன்று எழுத நீண்ட நாட்களாக எண்ணியிருந்தேன்.
இந்த வேளையில்தான் சென்னை ராயபுரத்தில் ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றேன். அங்கே உணவு பரிமாறிய ஒருவரின் அன்பு கலந்த செய்கைகள் பற்றியே இந்தப் பதிவு….
அதை நான் எழுதுமுன்……
“வடசென்னை”ன்னா உங்க மனசுல என்ன தோணுது சொல்லுங்க என தென்சென்னைவாசிகள் சிலரிடம் கேட்டேன். அவர்களது பதில்கள் இங்கு…
ராம ப.: அட அது ஒரு ஊராங்க. ஒரே டிராபிக்கு, கச்சடா. அந்த பக்கம் வரணும்னாலே எனக்கு வெறுப்பா இருக்கும். நீங்க எப்படி அங்க இருக்கீங்கன்னு நான் யோசிக்கறேன்.
பாஸ்: நீங்க சொல்ற மாதிரியெல்லாம் “நல்ல மனசு, நல்ல வரவேற்பு” பத்தி நான் ஏதும் கேள்விப் பட்டதில்லை. ரவுடிப்பசங்க, கள்ளக்காதல் இதுதான் நான் பத்திரிக்கைல படிச்சதெல்லாம்.
ஜெய்லக்ஷ்மி: நார்த் சென்னை? எனக்கு சவுத் சென்னையிலேயே முக்காவாசி தெரியாது. நீங்க வேற! ஆனா ஏதோ ஒரு அழுக்கான எடம்னு நெனைக்கறேன்.
செந்தில்: அதெல்லாம் ஒரு ஊர்னு நீங்க இருக்கீங்க. இதுல கேள்வி வேற. சும்மா இருங்க கிரி.

இப்படித்தான் இருக்கின்றன பதில்கள்.

சென்ற வாரம் ஜூ.வி’யில் மிஸ்டர் மியாவ் பகுதியில் வந்த செய்தியைப் பாருங்கள்….
வட சென்னை பகுதியில் வாழும் ஒரு விளையாட்டு வீரனின் கதையை மையமாக வைத்து, ‘கருப்பர் நகரம்’ படத்தை இயக்கி வருகிறார் தங்கர்பச்சானிடம் பணியாற்றிய கோபி. ”ஆங்கிலேயர் காலத்தில் வட சென்னையை பிளாக் சிட்டின்னுதான் சொல்வாங்களாம். இப்பவும் வட சென்னையை தாதாக்கள் ஏரியா மாதிரிதான் காட்டுறாங்க. ஆனா, அந்தப் பகுதி மக்களின் ஆசாபாசங்களைத்தான் என்னோட படத்தில் சொல்லி இருக்கிறேன்!” எனச் சிலிர்க்கிறார் கோபி

சரி…வடசென்னை குறித்த மற்றவர்கள் கருத்தைப் பார்த்தோம்? என் கருத்து, என் இதயத்தின் குரல், என் அனுபவங்கள்? ஒரு நாள் பொறுத்திருங்களேன், எழுதிவிடுகிறேன்.
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...