Jul 12, 2010

உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின்



உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே  இந்தப் போட்டியை நள்ளிரவில் கண்விழித்துப் பார்த்தேன் நான்.


சூப்பர் ஸ்டார் அணிகளான பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளும் நம்மில் பெரும்பாலானவர்களின் பரிச்சய நாயகர்களை அடக்கிய இங்கிலாந்து அணியும் இந்த போட்டிகளின் ஒவ்வொரு நிலையில் தத்தமது கம்பார்ட்மன்ட்கலைக் கழற்றிக் கொண்டு இறுதிப் போட்டியை ஹாலந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு விட்டுத் தந்தன.

ஸ்பெயின் முதலில் இருந்தே ரேசில் எல்லோர் பார்வையிலும் முதல் இடத்தில் இருந்தது. 



இன்றைய ஆட்டத்தின் முதற்பாதியில் விறுவிறுப்பிற்குக் குறைவில்லை. அரங்கத்தினுள் ஆட்டக்காரர்கள் வாங்கிய அடிகள் மிதிகள் பார்த்து நமக்கு வலித்தது. மொத்தம் ஏழு மஞ்சள் அட்டைகள் தரப்பட்டன. அதில் ஐந்து ஹாலந்துக்கு. உலகக் கோப்பைகளின் இறுதிப்போட்டிகள் வரலாற்றில் இதுவே அதிகமாம்.



இந்த இறுதியாட்டமும் ஒரு "தடுப்பு ஆட்ட" ஸ்பெஷல் அமைந்தது. அதிலும் குறிப்பாக கடைசி நொடி கோல் தடுப்புகள் இந்த ஆட்டத்தில் அதிகம் அதிகம், மிக மிக அதிகம். கிட்டத்தட்ட துரதிஷ்டவசமாக இதுபோல் எட்டு பத்து கோல்கள் தடுக்கப்பட்டன. 

இரண்டாம் பாதியும் முடிந்து போக, மேலும் இரண்டு மஞ்சள் அட்டை விநியோகங்கள் மட்டுமே கூடிப் போயின. கோல்கள் ஏதும் சேரவில்லை.


ஆட்டத்தின் இரண்டாவது கூடுதல் நேரத்தில் நேர்ந்தது அந்த ஜாலம். இனேஸ்டா அனுப்பிய பந்து கச்சிதமாக கோல் ஆக.....ஆகா ஆகா.... ஸ்பெயின் வெற்றி பெற்றது.

அது ஆப் சைடு ஆகியிருக்கவேண்டிய கோல். மிக புத்திசாலித்தனமாக அதைத் தவிர்த்த இனேஸ்டா உண்மையாகவே சமயோசித சூப்பர் ஸ்டார்.

கடைசி நான்கு நிமிடங்களில் நான்கு வருடங்களை இழந்தனர் ஹாலந்து அணியினர்.

கணிப்புகள், ஆரூடங்கள், பால் என எல்லோரும் சொன்னது பலிக்க. இதோ கோப்பை ஸ்பெயினின் கையில்.  
.
.
image courtesy : fifa com
Related Posts Plugin for WordPress, Blogger...