Jul 8, 2010

கவுத்துட்டிங்களே ஜெர்மனி!

என்ன நடக்குது சார் இது?

எல்லாரும் ஸ்பெயின் டீமை ஜெயிக்கற குதிரை'ன்னு சொன்னாங்க சரிதான். அவங்க ஜெயிச்சதுல ஆச்சர்யம் யாருக்கும் இருக்காது. ஆனா ஜெர்மனி அணியோட செயற்பாடுகள் இந்த உலகக் கோப்பை முழுசுமே அவங்கதான் கோப்பையை தட்டிட்டுப் போகறாப்போல இல்ல இருந்துச்சி?

கடைசி நேரத்துல இப்படி சொதப்பி, அந்த ஆக்டோபஸ் "பால்" சொன்னது சரிதான்னு ஆக்கிட்டீங்களே ஜெர்மனி கனவான்களே!



முல்லரோட இழப்பை நல்லா உணர்ந்தாங்க ஜெர்மன் அணியினர். அவங்க தடுப்பாட்டத்துல ஏதும் பெருசா தப்பு இருந்ததாத் தெரியலை. இன்னும் சொல்லப் போனா ஸ்பெயின் அணியினர் கிடைச்ச நிறைய பழம் போன்ற வாய்ப்புகளைக் கூட அசால்ட்டா தடுத்தாங்க ஜெர்மனி அணியினர். அந்த கார்னர் வாய்ப்புல அடிச்ச அந்த ஒரே ஒரு கோலை மட்டும் தடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும் சங்கதி. 

ஆனா அதே சமயம் ஸ்பெயின் அணியின் தடுப்பு ஆட்டத்தைப் பற்றியும் சும்மா சொல்றதுக்கு இல்லை. கொன்னு போட்டுட்டானுங்க  பயலுவ. அவங்க வெற்றியின் ரகசியம் நேத்து நிச்சயம் அதுதான்.

எப்படியோ, இந்நேரம் அந்த ஆக்டோபியை "கொத்து" போட்டிருப்பாங்க. உண்மையை சொன்ன ஒரே குத்தத்துக்கு அவனுக்கு அந்த தண்டனை.
.
.
.
image courtesy: telegraph.co.uk
Related Posts Plugin for WordPress, Blogger...