May 25, 2010

அந்தநேரம் அந்திநேரம்




அந்திநேர
அழைப்பு...
அரங்கத்தில்
அவசரக் கூட்டம்
அடிவயிறு
அல்லல்படுது...

அதுவாயிருக்கும்?
இல்லை
இதுவாயிருக்கும்!?
எதுவாயிருக்கும்!!?

ஒண்ணுமே புரியல்லே
உலகத்திலே....
என்னம்மோ நடக்குது
மர்மமாயிருக்குது...
ஒண்ணுமே புரியல்லே
உலகத்திலே....
.
.
.

4 comments:

natbas said...

எல்லாமே விளையாட்டுதானா!

வலிக்குது சார்- அன்னிக்கு வாங்கின அடியே ஆறல, அதுக்குள்ளே இது வேறயா?

நான் எஸ்கேப்பு!

Giri Ramasubramanian said...

இதென்ன சார் வம்பா இருக்கு. ரெண்டு பேரு விமரிசனம் பண்ணினாங்க அப்படின்னு நான் என் மனசுல தோன்ற பகிர்ந்துக்க விரும்பற எதையுமே எழுதக் கூடாதா? இது நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு....(ஓவ் ஓவ்...இந்த வார்த்தை IPC படி தப்பா?), மன்னிக்கணும் ஒரு குறிப்பிட்ட மக்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் சங்கேதச் சேதி. எல்லோரும் சொல்ற மாதிரி இணையம் இலவசமா இருக்கறதாலயும், இது என் தளம்-கறதாலயும் இங்கே வெளியிட்டிருக்கேன். புரியாதவங்க என்னைத் திட்டிட்டு இதைக் கடந்து போயிடுங்க , இது உங்களுக்கானது இல்லை. காலம் ஒரு நாள் வரும் அப்போ விளக்கம் சொல்றேன்.

அடடடடா.....கிரி, என்னா அறிவு முதிர்ச்சிடா உனக்கு!?

skishor said...

என்ன கிரி, உங்க கவிதை புரிஞ்சதாலே இந்த கமெண்ட்,
"உங்களுக்கு என்ன இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும், கஷ்டம் எல்லாம் எங்களுக்குத்தானே
:-( "

Giri Ramasubramanian said...

@ skishore


அப்படி இல்லே. பாதிப்பு எனக்கு இல்லைன்னாலும், நிலையற்ற தன்மையின் அங்கமா இருக்கற ஒரு இடத்துல இருக்கமேன்னு வருத்தம் இருக்கு. மேலும் நான் பார்த்து சிரிச்சு பழகி வளைய வந்த நட்பு வட்டங்களுக்கு இது போல நடக்கறது மனசுக்கு வலியை மட்டுமல்ல, ஒரு இனம் புரியாத கனத்தையும் தருது.

கண்டிப்பா நான் சந்தோஷப் படலை. இப்போ நூத்தி சொச்ச பேரு அனுபவிக்கற வலியை நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால அனுபவிச்சிருக்கேன். எத்தனை கொடுமையான stress factor இதுன்னு எனக்குத் தெரியும். இப்போ இருக்கற சூழல்ல என்னால எல்லாருக்கும் நல்ல வழி பொறக்கணும்னு ஆண்டவன வேண்ட மட்டும் முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...