May 1, 2010

சுறா - என் பார்வைசுறா படத்தின் முதல்கட்ட வலைமனை விமரிசனங்கள், எஸ்.எம்.எஸ். தகவல்கள், நண்பர்களின் எச்சரிக்கைகள் இத்தனையும்   கேட்டபின் ஒரு யோசனையுடன்தான் இன்றுகாலை படம் பார்க்கப் போனேன்.


ஆனால் விஜய் அப்படி ஒன்றும் ஏமாற்றவில்லை. அவரது வழக்கமான படங்களுக்கு ஒரு அடியும் பிசகாமல் ஒன்றும் குறைவில்லை ஒன்றும் அதிகமில்லை என்னும் பாணியில் படம் இருந்தது. நாம் நிறைய எதிர்பார்க்கக் கூடாது அவ்வளவே.


புளியமரம்......புளியம்பழம் கிடைக்கும். தட்ஸ் இட். மாம்பழ சீசன் என்பதால் மாம்பழமா பழுக்கும்?


சென்னையில் கடும் மழை, கடும் வெள்ளம்.மீனவ குடும்பங்கள் யாழ்நகர் (!!!) கடலோரம் கடல் நோக்கி வெறித்த பார்வை பார்த்தவாறே எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. உடன் கலெக்டர், போலீஸ் ஆபீசர்கள், டாக்டர்கள், நர்சுகள்.

"அய்யா கடலுக்குப் போன எங்களைச் சேர்ந்த அறுவது மக்கள் இன்னும் திரும்பலையா, ரெண்டு நாள் முன்னமே வந்திருக்க்கணும அய்யா...."

"சார்...எஸ்...சார்...தேடிட்டு இருக்கோம் சார்....கடற்படை ஹெலிகாப்டர், படகுகள் மூலமா தேடறோம் சார்...எப்டியும் கண்டுபுடிச்சுடுவோம் சார், ஓகே சார்....ஓவர் சார்"

"சார் கண்டுபுடிச்சிட்டோம் சார், நம்ம படகுகள் மீனவர்கள் எல்லோரையும் பத்திரமா அழச்சிட்டு வருது சார்"

"சி.எம்.சார், எல்லாரையும் பத்திரமா கரை மீட்டுட்டோம் சார்"

"என்ன, நல்லா தேடுங்கப்பா, நம்மள்ள ஒருத்தரக் காணமா? யாரு அது, என்ன? நம்ம சுறாவா?"

"இங்க பாருங்க சி.எம்.க்கு அப்டேட் குடுத்துட்டோம், ஒருத்தர் காணோம்கறத எல்லாம் பெருசு பண்ணாதீங்க"

"எப்படிங்க, அவன் எங்கள்ள ஒருத்தன், எங்களுக்காக ஒருத்தன்....அவன் ஒருத்தன்தான்...ஆனா அவன் பலம் நூறு யானைக்கு சமம், அவன் இது பத்தாயிரம் அதுக்கு சமம், அவன் சாமர்த்தியம் ஒரு லட்சம் சாணக்கியனுக்கு சமம், அவன் அது ஒரு கோடி இதுக்கு சமம்"

ஏ காமெராவ கடல் பக்கம் திருப்புப்பா....யாரோ நீந்தி வர்றாங்க....

அட...நம்ம தலைவர் விஜய் நீந்தியே கரை சேர்கிறார்....இடையிடையே டால்பின் கணக்காய் பறந்து பாயும் நீச்சல் வேறு. ஓகே..இப்போ ஓபனிங் சாங்குக்கு நேரம் வந்துடுச்சி....

வெற்றிக்கொடி ஏத்து... என்னைக் காலில் எத்து...அப்புறம்....படம் பத்தி நான் வேற ஏதாவது சொல்லணுமா?


ஓகே...தமன்னாவுடனான காதல்:


ஸீன் ஒன்று: தமன்னா நாய்க்குட்டி காணோம். கடலில் தற்கொலை முயற்சி. விஜய் காப்பாற்றுகிறார்.


ஸீன் ரெண்டு: நடுரோட்டில் ஒரு பார்வையற்ற தம்பதியருக்கு விஜய் தன்   வழக்கமான பாணியில் உதவுவதைக் கண்டு தமன்னா நெகிழ்கிறார்.


ஸீன் மூன்று: மீண்டும் கடற்கரையில் தற்கொலை முயற்சி.


"என்ன கண்ணு பண்ற?"
"சாக போறேன்."
"எதுக்கு"
"என் லவ்வரு என்ன லவ் பண்றாரான்னு தெரியல"
"அவன்கிட்ட உன் லவ்வ சொன்னியா"
"அய்யய்யோ இல்லியே, சுறா ஐ.லவ்.யு."


அப்புறம் எதுனா சொல்லணுமா? அதுக்கு அப்புறம் என்னன்னா? 


அதுக்கு நான் தனியா ஒரு புக்கு எழுதறேன். அடுத்த வருஷம் புத்தகத் திருவிழால வாங்கிப் படிங்க.


போயிட்டு வரட்டுமா?

8 comments:

ராசராசசோழன் said...

உங்களுக்கு 2010 இன் பொறுமைசாலி பட்டம் தரலாங்க... படத்த பார்த்தது மட்டும் இல்லாம பதிவு வேறயா..

கிரி said...

@ ராசராசன்
எவ்ளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?

Anonymous said...

Hope you are mentally and physically alright.

natbas said...

அனானி சொன்னதுபோல், சுராவுக்கு அப்புறம் நீங்கள் இட்ட பதிவுகளில் சிலபல விபரீதமான மாற்றங்கள் தெரிகின்றன. தினமும் காலை ஆறு மணிக்கு தெய்வத்தை கொஞ்ச நாளைக்குத் தனியாயிருக்க சொல்லிவிட்டு காலாற நடக்கவும். நிறைய விட்டமீன் மாத்திரைகள் சாப்பிடவும். வசதி இருந்தால் ஆப்பிள் அன்னாசி போன்ற பழங்களை காலை மாலை இரு வேலையும் சாப்பிடவும். எதற்கும் பக்கத்தில் இருக்கிற மாரியம்மன் கோவிலில் மந்திரித்துக் கொண்டு ஒரு நல்ல மன நல வைத்தியரை அணுகவும்.

நாங்களும் எங்கள் பங்குக்கு உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். எங்களால் வேறன்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.

கிரி said...

@ அனானிமஸ் / நட்பாஸ்

அப்படி ஒன்றும் குரூரமாகவேல்லாம் நிகழ்ந்துவிடவில்லை. நான் பெரும் எதிர்பார்ப்பு எதுவும் வைத்து சுறா பார்க்கச் செல்லவில்லை.

விஜய் பட இலக்கணங்களாக நான் பார்ப்பது இவற்றை:

ரொம்பவும் பில்ட் அப் தரப்பட்டு ஒரு அறிமுகக் காட்சி.
லூசு போல ஹீரோயின், அல்லது அவள் தெளிவாய் இருப்பாள் அவள் பின் இவர் லூசு போல சுற்றுவார், கைத்தடியாய் ஒரு காமெடியன், ஊருக்கு கெட்டது செய்யும் வில்லன், ஊருக்கே எனப் பிறந்த விஜய், இடைவேளையில் வில்லனுக்கும் ஹீரோவுக்குமிடையே வாக்குவாதம் சவால், இரண்டு டப்பாங்குத்து, இரண்டு டூயட், ஒரு தத்துவம், ஒரு உணர்ச்சிமயமான உத்வேகம் என ஆறு பாடல்கள், கடைசியில் சவால்களில் ஜெயித்து வில்லனையும் கொன்று ஜெயிக்கும் விஜய்.

இது தவிர வேறு ஏதும் விஜயிடம் எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கவும் வேண்டாம் என அவரே சொல்லிவிடுகிறார், அவ்வப்போது.

விஜய் படங்களை தியேட்டரில் பார்க்கும் ரகமுமில்லை நான். ஏதோ விடுமுறைக்கு என் வீடு வந்திருந்த குழந்தைகள் கேட்டதன் பேரில் படம் பார்க்கச் சென்றேன். மற்றபடி நான் எதை எதிர்பார்த்தேனோ அதை சற்றும் குறைக்காது தந்தார் விஜய்.

ஐம்பது வாய்ப்புகள் அளித்தும் திருந்தாத நடிகர். அவர் ஒரு மாஸ்....நாமெல்லாம் அவருக்கு தூஸ்.....(யோவ் அந்த ஆளு லூசுய்யா என்கிறான் என் அலுவலகத் தோழன்).

natbas said...

கிரி, நீங்க விஜயோட அடுத்த பட ஸ்க்ரிப்ட்டை தயார் பண்ணிட்டீங்க போல இருக்கே? SAC உங்களைத் தேடறார். எப்போ ஷூட்டிங்?

கிறுக்கல் கிறுக்கன் said...

எதுக்கு அந்த போட்டோ? புரியலியே??

கிரி said...

@ கிறுக்கல் கிறுக்கன்

அது ஒண்ணும் இல்லைங்க. வெப்-ல சுறா-ன்னு தேடுகையில இந்த இமேஜ் கிட்டிச்சி. சரி படத்துக்கு apt -ஆ இருக்கறதா நான் நினைச்சு போட்டுட்டேன்

Related Posts Plugin for WordPress, Blogger...