Jul 19, 2011

எழுத மறந்த கதை

அசோக மரத்தின் அத்தனை இலைகளிலும் ஈரம். வெளிர்பச்சை க்ரோட்டன் செடி ஒவ்வொன்றும் தலையை சிலுப்பிப் பெய்த மழைஈரத்தைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. வேப்பமரக் கிளைக் காகம் ஈரத்தைச் சடசடவென உதறிக் கொண்டிருக்க, சேற்றுக் கோட்டுடன் மோட்டார் சைக்கிள்கள் கடந்த பதிவுகளை முதுகில் சுமந்து கொண்டிருந்தது சாலை. தண்ணீர்ப் பாம்பு ஒன்றும், தத்தித் தாவிய தவளையும் ஒன்றினை ஒன்று கண்டு கொள்ளாமல் எதிரெதிரே கடந்து சென்றன.

இப்படி மேலே சொன்னபடிக்கு வர்ணிக்கும்படி ஏதுமற்ற ஒரு மட்டமத்தியானத்தைக் கடந்ததொரு வெக்கை வெயில் மாலை அது.

அவன் எங்களூர்க்காரன். ஏதோ மருத்துவ சந்தேகம் பெறவேண்டி நான் இத்யாதி இத்யாதி அலுவலகத்தில் பணிபுரியும் சேதியறிந்து எங்கள் அலுவலக வாசலுக்கு வந்திருந்தான். டாக்டர்கள் அறையை நான் காட்ட, அலுவலக டாக்டர்கள் இருவரை சந்தித்து வேண்டுமட்டும் குத்திக் குடைந்து தேவையான பதில்களை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் கிரி. எங்க மாமாவுக்குத்தான் ஏதோ தோல் பிரச்னை மாதிரி இருக்கு. சரி அது என்ன மாதிரி எப்படின்னு தெரிஞ்சி தெளிவு பண்ணிக்கிடலாமேன்னு வந்தேன்", என்றவன் "சரி வாங்க, ஒரு காப்பி சாப்பிடலாம்", அழைத்தான்.

"பாலிமார்'ல போண்டா கூட சாயந்திரம் நல்லா சூடாப் போடுவான்" உபதகவலும் தர, நான் சப்புக் கொட்டத் தொடங்கிவிட்டேன்.

நடைதூரம்தான் பாலிமார். வெளிவாசலில் மரத்தடி நாற்காலிகளில் அமர்ந்து, 'ரெண்டு செட் மைசூர் போண்டா குடுங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு காபி, ஒண்ணு கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஹாஃப் ஷுகர்", ஆர்டர் செய்தான்.

"ஆங், சொல்ல மறந்துட்டேன் பில் நீங்கதான் பே பண்ணனும். நான் இன்னைக்கி பர்ஸை  வீட்ல மறந்து தொலைச்சிட்டேன்"

"அடங்கொய்யால! இதை காபி சாப்பிடக் கூப்பிடறதுக்கு முன்னாலையே சொல்லணும்டே " என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்...இப்படியெல்லாம் ஒரு பதிவு எழுதி அந்தப் பதிவும் மிகவும் சுவாரசியம் மிகுந்ததாக அமையும் என நீண்ட நெடுங்காலமாக நான் நினைத்துக் கொண்டேயிருந்த வேளையில்...

இப்படி ஒரு பதிவை எழுதிட்டாரய்யா நம்ம பரிசல்.

அதனால மேற்படி பதிவை நான் எழுதாமலேயே தவிர்க்கிறேன்.
.
.
.


3 comments:

வேதாளம் said...

நமக்கு எங்க போனாலும் வடக்குப்பட்டி ராமசாமிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் . நம்ம விதி...!

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...