Feb 29, 2012

பாஸ்! அந்த கிரி நான் இல்லீங்கோ!





முதலில் ஒரு நாள் சொக்கன் டிவிட்டரில் (அல்லது ஜி'டாக்கில்) கேட்டார்.

"ஓய்! என்ன ”அபியும் நானும்” உனக்கு நல்ல படமா?"

"இல்லீங்களே! நான் அந்தப் படம் பார்த்ததே இல்லையே!"

"அப்போ எதுக்கு பாரா ப்ளாக்'ல அப்படி கமென்ட் போட்ருக்கீரு?"

"எப்படி?"

ஒரு லிங்க் தருகிறார். அங்கே "கிரி"  என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் படத்தை கிட்டத்தட்ட அல்லது முழுசுமாய்ப் புகழ்ந்து.

"ஐயா! அந்த கிரி நானில்லீங்க, வேற யாரோ!"

"ஓ! அப்ப சரி!"

சமீபத்தில் ச.ந.கண்ணன் கேட்டது, "சொல்வனத்துல நீங்க எழுதறீங்களா?"

"தொடர்ச்சியால்லாம் எழுதறது இல்லைங்க. துருவ நட்சத்திரம் வெளியீட்டு விழா பத்தி மட்டும் ஒரு கவரேஜ் எழுதினேன். ஸ்பேஸ் கெடைச்சா இன்னும் எழுதலாம்"

"அப்போ அங்கே கிரிதரன்'ங்கற பேர்ல இசைக் கட்டுரையெல்லாம் படிச்சேனே"

"அவரு ஆர்.கிரிதரன், பெரிய ஆளுங்க. நமக்குப் பேரு வெறும் கிரி'தானுங்க, துக்கடா ப்ளாக்கருங்க", என்றேன்.

இன்று டிவிட்டரில் நம்ம நண்பர் அன்பு <@antoniOanbu>   என் பெயரை மென்ஷனில் போட்டு ஏதோ என் தலையை உருட்டியபடி தன் நண்பர்களுடன் ஏதோ அளவளாவிக் கொண்டிருந்தார்.

"யே! என்னய்யா, என் தலை உருளுது?"

"How  to remove  google  web  history " என்ற தலைப்பில் கிரி-ப்ளாக் வலைத்தளத்தில்http://giriblog.com வெளியான இணைப்பைத் தந்து, "உங்க லிங்க் பத்தித்தான் பேசிட்டு இருக்கோம். பசங்க டவுட் கேக்கறாங்க", என்றார் அன்பு.

"ஐயா! அது என் ப்ளாக் இல்லீங்கோ! அவரு வேற கிரி'ங்கோ", என்று அவருக்கும் டயலாக் மறுஒலிபரப்பு செய்தாயிற்று.

ஆகவே, அன்பர்களே நண்பர்களே வம்பர்களே!

என் பேரு கிரி மட்டும்தான். இருந்தாலும் இந்த பேருல இணையத்துல நெறைய பேரு உலாத்தறதால அவங்க பேரையெல்லாம் நான் கெடுத்ததுட வேணாமின்னு என் அப்பா பேரையும் சேர்த்து "கிரி ராமசுப்ரமணியன்" அப்படின்னு இணையத்துல எழுதிட்டு இருக்கேன். இந்த பேர்ல மட்டுந்தான் எழுதறேன். ஆமாங்க மறுக்கா சொல்லிக்கறேன், இந்த பேர்ல மட்டுந்தான் எழுதறேன்.

ஆக, என் பேரு....

கிரி ராமசுப்ரமணியன்

கிரி ராமசுப்ரமணியன்

கிரி ராமசுப்ரமணியன்


சரிங்களா?

நம்ம சைட்டு ரெண்டே ரெண்டுங்க:-

இங்கே பேசறோம்:
http://sasariri.com

இங்கே பாடறோம்:
http://paadugiren.blogspot.com

பெறகு மத்த கிரி'மார்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்!
 கொஞ்சம் கிரிராஜன், கிரிதரன், கிரிகோபாலன் அப்படின்னு உங்க பேருக்குப் பின்னால உங்க பேரோட எக்ஸ்டென்ஷனையும் சேர்த்து எழுதிக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். உங்க பேரு என்னால கேட்டுப் போகாது.

புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...