Mar 21, 2012

ஓலைக்கணக்கன்


சொந்தத்திலேயே பெண் கேட்டு (அல்லது பையன் கேட்டு)ப் போய் நின்றால் பெண்/ பையன் தர சம்மதம் இல்லாதவர்கள், “நம்ம தலைலயே நாமளே என்ன அட்சதை போட்டுக்கறது”, என்கிற ரீதியிலான பதில் தந்து மழுப்புவார்கள்.

கார்க்கி சென்ற வருடத்தின் சிறந்த வலைப்பதிவாக “ஓலைக்கணக்கன்” வலைமனையை தன் 2012’ன் சிறந்தவைகள் பட்டியலில் குறிப்பிட்டபோது அப்படித்தான் நானும் நினைத்தேன். என்னது பக்கத்துல இருந்து பழகும் ஒருத்தரை “சிறந்த பதிவர் 2012” என்று பட்டம் தந்துப் பாராட்டுவது என்று. கார்க்கி சொன்னது சரிதான் என்று சமீபத்தில்தான் நம்பினேன்.

பக்கத்திலிருந்து தினம் பழகும் ஒருத்தர் எழுதுபவைகளை நாம் பெரும்பாலும் சிரத்தையாகப் படித்து விடுவதில்லை. “எழுதியிருக்கியா? ஓகே”, என்ற ரேஞ்சில் படித்தும் படிக்காமலும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, “நல்லாருக்கு நல்லாருக்கு”, என்று சொல்கிறோம். முடிந்தால் அவர் திருப்திக்கு பதிவின் இடையில் இருந்து நான்கு வார்த்தைகளை எடுத்து அவருக்கே அனுப்பி, “அது சூப்பர் போ”, என்று போலிப் பாராட்டையும் இணைக்கிறோம். 

நட்டு என்கிற நடராஜன் (ட்விட்டரில் @nattu_g) பதிவுகளில் ஒரேயொரு பதிவை மாத்திரம் எப்போதோ நுனிப்புல் மேய்ந்த நினைவு. மற்றபடி அவர் வலைமனைப்பக்கம் போய்வந்த நினைவில்லை. சமீபத்தில்தான் வெட்டியாய் இருந்த ஒரு பொழுதில் நடராஜரே எதிரில் வந்து ”வாசியும் ஓய்” என்று ஓசியில் (ஆஃபீஸ் கம்யூனிகேட்டரில்) வலியத் திணித்து சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது.

”வாவ்! வாட் எ திறமை இந்தப் பையருக்குள்?” என்று வியந்தேன்! 

“தெருநாய்” என்ற இந்தப் பதிவில் என் கையெழுத்தையும் இட்டு வைத்திருக்கிறேன், அதையும் இப்போதுதான் கவனிக்கிறேன். நிஜமாகவே கவனிக்கத்தக்க பதிவுதான் இது.

இந்தப் பெண் விடுதலை பதிவு “ஆனந்த விகடன்” ஸ்டஃப். தவறிப்போய் இவர் வலைமனையில் வெளியிட்டு விட்டார். தலைப்பை மட்டும் இன்னும் நன்றாக யோசித்திருக்கலாம்.

பிச்சைக்காரன்”, கிட்டத்தட்ட ஆளவந்தான் படம் பார்க்கும் எஃபெக்ட் தருகிறது. ஓவர் ஸ்டஃப் ஆனால் நடையில் இவர் காட்டும் ஜாலம் இவர் திராணியைப் பறை சாற்றுகிறது.

மற்ற பதிவுகளை நீங்களே தேடிப் படியுங்கள்

தமிழின் தன்னிகரில்லா இலக்கியவாதியாக வலம்வர வாழ்த்துகள் நடராஜ்!

2 comments:

நடராஜன் said...

தங்கள் வலைமனையில் எனது புகைப்படம் இட்டமைக்கு மிக்க நன்றிகள்! என் பதிவை தாங்கள் ரசித்ததில் எனது மகிழ்வுணர்வு தீர்ந்துவிட்டதால், என்னைப் பற்றி எழுதியமைக்கும் மகிழ்ச்சி என கலப்படமில்லா நன்றி மட்டுமே தரமுடிகிறது. முன் நண்பர்கள் சிலர் கைப்பிடித்து எழுத வைத்தார்கள், இப்போது கைத்தூக்கி விட வந்துவிட்டார்கள் என அறியும் போது என் சிந்தை நன்றியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி!

Rathnavel Natarajan said...

நல்ல அறிமுகம்.
வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...