Nov 1, 2009

சைபர் க்ரைம் - II


மீன் பிடிக்க நான் கற்றுக் கொடுத்த என் முந்தைய blog-ல் சைபர் க்ரைம் பல வகை என சொல்லி இருந்தேன். இதோ இன்னொரு முறை பற்றி......
சமீபத்தில் விகடனில் வெளி வந்த சிறுகதையின் சுருக்கம் இதோ!


செல்வி அந்த ஆபீஸ்-ல் அழகு தேவதை, சிவா உட்பட இளைஞர்கள் அனைவரின் கனவுக்கன்னி. அவள் வேலையை விட்டுப் போகிறாள். சிலப்பல நாட்களுக்குப் பிறகு சிவாவிற்கு ஒரு hot-mail வருகிறது செல்வியின் பர்சனல் மெயிலில் இருந்து, "Hi Siva, I am in urgent need of money. My father serious. I tried to contact you, your phone is not reachable. can you transfer Rs.10000 to my bank account no. 123456, etc etc" என்று. சிவா செல்வியை தொடர்பு கொள்ள பார்க்கிறான், அவள் போனும் சுவிட்ச் ஆப்-ல் இருக்கிறது. அவள் அழகும், அவன் நினைவுக்கு வரும் அவள் அவயங்களும் அவனை யோசிக்க விடாமல் online bank-ல் 10000 ரூபாய் டிரான்ஸ்பர் செய்ய வைக்கின்றன. அவள் கூப்பிடுவாள் என இரண்டு மூன்று தினங்கள் காத்திருக்கிறான். நான்கு நாட்களுக்குப் பிறகு செல்வியிடமிருந்து மற்றொரு மெயில். திறந்து பார்த்தால், "Hi All, My email is hacked by someone, they sent mail to everyone in my contact list to ask for money it seems. Now I reset my password. Hope you did not transfer any money to them. My phone was also out of order for a weeks time. Regret the inconvenience. Bye, - Selvi" என்று இருக்கிறது. சிவாவிற்கு தலை கிறுகிறுக்க, அலுவலகமே அல்லோலகல்லோலப் படுகிறது. காரணம், ஏமாந்த லிஸ்டில் இன்னிம் பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள்.

இப்படியாக அப்படியாக....நீங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்கோங்க...ஜாக்கரதையா இருங்கோ சாமியோவ்....!!

1 comment:

virutcham said...

எங்கள் தளங்கள் ் இரு தினங்கள் முன் hack செய்யப்பட்டது. விருட்சம் தளத்தை சரி செய்து விட்டோம். admin corrupt செய்யப்பட்டு இருந்தது.
இன்னொரு தளம் kidzmagzine.com முற்றிலும் hack செய்யப்பட்டு விட்டது. விடுவிக்க பணம் கேட்கிறார்கள்.

Can you suggest what we could do to get rid off this? Planning to submit a complaint. If you have any sugestions pls let me know

Related Posts Plugin for WordPress, Blogger...