Sep 30, 2010

மிச்சமிருந்த இருட்டு...






ஊமையாக நின்றது வெளி
நிச்சலனமென நித்திரை
ஒளியில் ஒளிந்தது
ஒற்றைக் காற்று

பார்வைக்குப் பக்கம்
பக்கமில்லை தூரம்

தகதகக்கவாவெனக் கேட்டு
தத்தி தாவிய தட்டான்
தூரத்து மரமொன்றில்
வெட்டுமொலி மரங்கொத்தி

கேணித்திட்டு போல்
வாளி நிறைய நிலா
கயிற்றுக் கட்டிலாய் மேகம்
மிச்சமிருந்தது இருட்டு...

8 comments:

natbas said...

புரியல, இருந்தாலும் ஒண்ணு புரியுது.

நீங்க குறிப்பிடத்தக்க சில கவிதைகளை எங்க தலையில கட்டப்போறீங்க என்பது என் அவதானிப்பு.

இதே ட்ரெண்ட்ல கண்டின்யூ.

எனக்குப் புரியாட்டி என்ன, நீங்க தெளிவா இருந்தா சரி.

அப்படியே அந்த லேபல் எல்லாத்தியும் தூக்கிடுங்க. இருக்கற கொஞ்ச நஞ்ச கன்பூசனையும் இன்னும் கன்பூசன் பண்ணுது- அது என்ன ஏதோ ஒரு இசம்?

Anonymous said...

காலிங்பெல் அடித்தது கதவைத்திறந்தேன் விழுந்தது வெட்டு என்று போலீஸ் கம்ப்ளையிண்ட்டுக்குகூட ஒரு பக்கம் எழுதுகிறீர்கள் நட்பாஸ்.இதற்கு விளக்கம் எழுதக்கூடாதா நீங்கள்.
இரவைப்பற்றி எல்லாம் சொல்லிவிட்டேன் மிச்சமிருப்பது இருட்டு என்கிறார் கிரி.
ஒரு சந்தேகம் மரங்கொத்தி இரவுப்பறவையா?

natbas said...

:)

நீங்க சொன்ன மாதிரி எழுதலாம்தான்...

ஆனா நண்பர் வீரா இருக்காரு பாருங்க, அவரு என் தோளுக்குப் பின்னால ஒளிஞ்சு நின்னுக்கிட்டு இவன் எப்படா உளறுவான்னு பாத்துக்கிட்டிருக்காரு.

ஏதாவது சொன்னேன்னு வையுங்க, கிழிச்சுத் தொங்க விட்டுருவாரு- எதுக்குங்க வம்பு!

உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க-

கேணித் திட்டு என்பது படித்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து உரையாடி ஒருத்தரிடம் இருந்து இன்னொருத்தர் கற்றுக் கொள்வதற்கானக் குறியீடு. நம்மைப் போன்ற உதவாக்கரைகளுக்கு ஒரு குட்டிச் சுவர் இருக்கிறதில்லையா, அது மாதிரி படித்தவர்களுக்குக் கேணித் திட்டு.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு," என்று வள்ளுவர் கூறி இருப்பது இங்கு நோக்கத்தக்கது. கேணித்திட்டுல இவங்க கூடுறது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக.

ஆனா பாருங்க, அவ்வையார், "கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு" என்று சொல்லி இருக்கிறார் இல்லையா? அதை நம் கிரி நினைவு படுத்துகிறார். "வாளி நிறைய நிலா"

கிணற்றில் அளவில்லாமல் நீர் இருக்கிறது என்பதால் அத்தனையையும் நாம் குடித்து விட முடியுமா? அதுவும் இது நீர் சுரந்து கொண்டே இருக்கிற கிணறு. ஏதோ, நம் அறிவுக்கு எட்டியபடி ஒரு வாளி எடுத்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் (ஒரு வாளி குடிக்கக் கூடிய அறிவாளிக்கே நாக்கு தள்ளிடும்னு வெச்சுக்குங்க). கேணி அளவு அறிவு. அங்கு தங்கள் தாகத்தைத் தனித்துக் கொள்ள அன்பர்கள் ஒரு திட்டில் கூடுகிறார்கள். ஆனால் அவர்களால் சேந்துப் பருக முடிவதோ ஒரு வாளி அளவுதான்- என்ன ஒரு கற்பனை பார்த்தீர்களா?

கிணற்றில் கண்ணுக்குத் தெரியாமல் இருள் போர்த்திருந்த அறிவு உணர்வு வெளிக்கு வந்ததும் நிலவொளி போல் மெல்லிய வெளிச்சம் காட்டுகிறது- அதைத்தான் கவிஞர் கிரி- "வாளி நிறைய நிலா!" என்று சுட்டுகிறார்.

இந்த இடத்தில் முந்தைய இரண்டு வரிகளையும் கவனிக்க வேண்டும்- "தூரத்து மரமொன்றில்
வெட்டுமொலி மரங்கொத்தி" மரங்கொத்திப் பறவையைப் பற்றி நீங்கள் ஐயப்படுவது நியாயம்தான்.

ஆனால் கவிதைக்கு அழகே அதன் பல பரிமாண, பன்முக தரிசனம்தான். நான் இந்தக் கவிதை ஸியி என்ற கவிஞனின் ஜென் கவிதையை எதிரொலிக்கிறது என்று நினைக்கிறேன்-

"இரவெல்லாம் தூங்க முடியவில்லை என்னால்
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்."

இதை விளக்கும் விதமாக, திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள், "இந்த பாடலில் நிலவு முன் காணாத ஒரு நெகிழ்வு தன்மையும் உடனடியும் கொள்கிறது. அதே நேரம் நிலா வெறும் காண்பொருள் அல்ல. அது நம்மோடு கலந்துவிட்ட இயக்கமாக மாறுகிறது. கவிதையின் குரலான நான் நிலவை அனுமதிப்பதின் வழியே அவன் நித்யமான இயக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான்," என்று எழுதுகிறார். http://www.sramakrishnan.com/view.asp?id=266&PS=1

ஜென் சாமியார்கள் நிலவினூடாகத் தங்களை நித்தியமான இயக்கத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கேணித் திட்டில் நமக்குக் கிடைப்பது வாளியளவு நிலவுதான். நம் காதில் விழும் குரல்கள் நமக்கானதல்ல, அவை நம்மை அழைப்பதில்லை. டோக் டோக் என்று நமக்கு சம்பந்தமில்லாத, உறைந்துபோன நினைவுகளைக் குறிக்கும் மரத்தில் உயிர்ப்பைத் தேடும் மரங்கொத்திப் பறவைகளின் எந்திர ஓசைதான் நமக்குக் கேட்கிறது. இதில் இழப்பின், இயலாமையின் வலி தெரிகிறதில்லையா?

"இரவைப்பற்றி எல்லாம் சொல்லிவிட்டேன் மிச்சமிருப்பது இருட்டு என்கிறார் கிரி."- எவ்வளவு நுண்ணுண்ர்வோடு நீங்கள் இந்தக் கவிதையை அணுகி இருந்தால் இதன் மையக் கருத்தை பளிச்ச் என ஒற்றை வரியில் பிடித்திருப்பீர்கள்!

உங்கள் வாசிப்புத் திறன் எனக்குப் பெரும் வியப்பாய் இருக்கிறது டொக்டர்... பொறாமையாகவும் இருக்கிறது. நான் பக்கம் பக்கமாய் எழுதுவதை ஒற்றை வரியில் சொல்லி விட்டீர்களே...

இன்னும் என்னென்னவோ சொல்லலாம், ஆனால் இதற்கே நண்பர் வீரா என்ன சொல்வாரோ என்று பயமாக இருக்கிறது.

மொத்தத்தில் இது ஒரு அருமையான கவிதை. நண்பர் கிரி அனுமதித்தால் இரண்டு வரிகளுக்கு ஒரு பதிவு என்று ஒரு வாரத்துக்கு இந்தக் கவிதையின் சுவைகளைப் பாராட்டி சிறப்புப் பதிவுகள் போட நான் தயார்...


@வீரா- ஸ்டார்ட் மூசிக்!

Anonymous said...

அருமை பாஸ்

இதில் மிச்சமிருப்பது இருள் என்கிற வரி ஆழமானது இல்லையா.
கரும்பலகை, ஆசிரியர் வெண்கட்டியால் எழுதுகிறார்.
கொஞ்சம் அறிவு சேர்கிறது.
பிறகு சுத்தமாக அழித்துவிட்டுச்செல்கிறார்.
அப்போதும் மிச்சமிருப்பது இருள் இல்லையா.
இருளைபின்புலமாக கொண்ட ஓவியம் போன்றது தான் வாழ்வா?
இப்படி ஒளிதரும் கணங்களைத்துடைத்து விட்டால்
மிச்சமிருப்பது இருள்?

கிரி ஒரு ஓவியராக இருந்தால் முதலில் கன்வஸ் முழுக்க கருப்பு வண்ணத்தை பாவித்திருப்பார். முழுமையான இரவு.பிறகு கன்வஸிலிருந்து தீட்டத்தீட்டமெல்ல இருள் அகன்று போகிறது. நிலவும் வெளிச்சமும் மேகமும் கிட்ட இருப்பது போலத்தோன்றும் தூரப்பாதையும் நிலவும்.
காற்றுவீசுவதை பார்க்கமுடியாத மரங்களின் அசைவு துலங்கா இருட்டு.இரவுப்பறவைகளின் விலங்குகளின் சலனம்
இப்படி ஓவியம் நிறைவுறும் போது தூரிகைபடாத இடங்களில் இருட்டு மிச்சமாயிருக்கும்.
இருட்டு ஓவியத்தில் ஆழத்தை அளிப்பது இருட்டில்லாத ஓவியம் பாழ்.
வாழ்வும் அத்தகையதே.இருளின் பின்னணியில்.. இருளை நிரப்புதல்தான் வாழ்க்கையோ

natbas said...

தெய்வமே! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!

உங்க தரிசனம் இந்தக் கவிதைக்குப் புதிய பரிமாணம் கொடுத்திருச்சு.

இப்பதான் தெரியுது, குயில் ஏன் ஓயாம பாடுது, கவிதை ஏன் தன் வாசகனைத் தேடுதுன்னு...

உங்களைப் போன்ற வாசகனை அடையும்போதுதான் ஒரு நல்ல கவிதை முழுமை பெறுது, இல்லையா? கிரியும் நீங்களும் சேர்ந்து ஒரு நல்ல கவிதையை நிகழ்த்திக் காட்டிட்டீங்க. மிக்க நன்றி.

நல்ல, உயர்ந்த, நுண்ணிய வாசிப்பு அனுபவத்தை சாத்தியமாக்கியதற்கு மீண்டும் என் தாழ்மையான நன்றிகள்.

Giri Ramasubramanian said...

நான் எழுதின பத்து வரிக் கவிதைக்கு நூறு வரி கமெண்ட்டா? என்னக் கொடும பாஸ் இது?

எனிவே ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. நான் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஆற்ற வேண்டிய கவிதைக் கடமைகள் நிறைய இருக்குன்னு புரியுது. தொடர்றேன். தொடர்வேன்.....

பை தி பை.... நட்பாஸ்....உங்களுக்கு நம்ம தளத்துல இல்லாத அனுமதியா? இன்னும் நாலு சிறப்புப் பதிவுகள் இந்தக் கவிதை பற்றி நீங்கள் எழுதக் கடவது.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

அது சரி...உங்க நண்பர் அபராஜிதன் என் தளத்துல எல்லாம் எட்டிப் பார்க்க மாட்டாரா? நீங்க அவர்கிட்ட என்னை ஏன் அறிமுகம் செய்யக் கூடாது? என் எழுத்துக்கள் அவர் பார்வையில் எழுத்தில்லையா?

இந்தக் கவிதைக்கு அவரோட எதிவினைய நான் எதிர் பார்க்கறேன்னு சொல்லுங்க.

மேலும் வீரா அவர்கள் இங்கு வர்றதைத் தடுக்க நீங்க யாரு....

வீரா சார், சார் உங்க கருத்து என்ன சார்? என் கவிதைய விடுங்க, அதுக்கு உங்க நண்பர் எழுதின பரிமேலழகர் உரைக்கு உங்க பதில் என்ன?

natbas said...

அபராஆஆஆஆஆ ஜிதனாஆஆஆஆஆ!!!!!!!!!!!!

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...