Mar 6, 2013

ரிடர்ன் ஆஃப் தி தாசர் பாடல்கள்


ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது!

சத்யாவை எனக்கு அவரது தாசர் பாடல்கள் தளம் மூலமாகத்தான் அறிமுகம். நட்பாஸ் ஒருமுறை தாசர் பாடல்கள் தளத்திலிருந்து ஒரு பதிவை (ட்விட்டரில் (அ) ரீடரில்) பகிர்ந்திருந்தார். அன்று முதல் தாசர் பாடல்கள் தளத்தின் தொடர் வாசகனானேன்.

தாசர் பாடல்களுக்கான சத்யாவின் விளக்கவுரை வாசித்ததும் ஏற்படும் மனநிறைவை வார்த்தைகளால் விளக்க முடியாது. பக்தியும் பரவசமும் அற்ப வார்த்தைகளுள் அடங்கிவிடுவதில்லை.

”சத்யா இங்க ட்விட்டர்ல இருக்காரா?”, என்று கேட்டு அவரை அங்கும் தொடர்ந்தேன். சத்யாவின் தாசர் பாடல்களுக்கு அடுத்து அவரது கிசும்பு நகைச்சுவை ட்வீட்களில் ரெகுலராக திளைப்பதும் இன்னொரு ஆனந்தம். சத்யாவின் எள்ளல் ட்வீட்கள் ஸ்பெஷல் என்றால், சுய எள்ளல் ட்வீட்கள் செம்ம ஸ்பெஷல்.

திடீரென்று, ”அடுத்த ஆறு மாசத்துக்கு தாசர் பாடல்கள் தளம் இயங்காது”, என்று போர்டு போட்டார் சத்யா, சென்ற ஜனவரி பதினான்கு அன்று மறு தொடக்கம் செய்திருக்க வேண்டிய தாசர் பாடல்கள் தளம் ரீ-ஸ்டார்ட், மக்கர் என்ற ரீதியிலேயே ஓடிக்கொண்டிருந்தது.

இடையில் 365process பதிவுகளை ஆரம்பித்தார் சத்யா. தினம் ஒரு ப்ராஸஸ் தகவல். ப்ராஸஸ் பதிவுகளுக்கான சத்யா வெளியிட்ட தினசரி விளம்பர ட்வீட்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவானது என்றால் அது மிகையில்லை. 

ஆம்னிபஸ் தளம் தொடங்குகிறேன் என்றதும், “என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோப்பா”, என்று இங்கும் குதித்தார் சத்யா. எங்களில் மற்ற எல்லோருக்கும் அவரவர் பதிவு என்றோ, அன்று காலையில் உட்கார்ந்து கடைசி நேரத்தில் எழுதுவதே வழக்கம். ஆனால் சத்யா தன் ஸ்லாட் புதன்கிழமை என்றால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறுகளிலேயே பதிவை மின்னஞ்சலில் எங்கள் பார்வைக்கு அனுப்பி எங்களை வெறுப்பேற்றுவார்.

கார்பரேட் கம்பேனிகளில் வொர்க்-லைஃப் பாலன்ஸ் என்று ஒரு விஷயத்தைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். அதுபோல பர்சனல் லைஃப் - சோஷியல் லைஃப் பாலன்ஸ் பற்றி சத்யாவை ஒரு பதிவு எழுதச் சொல்ல வேண்டும்.

சென்ற வாரம் 365process தளத்தின் 365 பதிவுகளையும் நிறைவு செய்துவிட்டு இதோ இப்போது தாசர் பாடல்கள் தளத்தை மறுதிறப்பு செய்திருக்கிறார் சத்யா. இனி தொடர்ச்சியாக அங்கே எழுதுவார்.

ராம நாமம் என்னும் பாயசம் என்ற இந்தப் பதிவைப் படித்ததும் அதே பழைய பரவசம் என்னுள், மறுபடியும்.

ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...