முடியலை சாமி முடியலை....
இந்தப்பாடல் என்னைப் பாடாய்ப்படுத்துகிறது.
ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து, விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் எல்லோரையும் தேடிப்பிடித்து வாரியணைக்கும் ஆவல் மேலிடுகிறது. இந்த நால்வரில் யார் பெஸ்டாகச் செய்துள்ளார்கள் என என்னால் சொல்ல ஏலவில்லை.
மிக இளைமையாக ரஜினிக்கு இந்தப்பாட்டை வடித்துத் தந்துள்ளார் ரஹ்மான். வி.தா.வ.'வில் சிம்புவிற்குப் போட்டு வைத்த டியூனை ரஜினி திருடிவிட்டாரோ எனத் தோன்றுகிறது. அத்தனை இனிமை, இளமை, குதூகலம் கொப்புளிக்கிறது பாடலில்.
இளமைத்துள்ளலில் ரஹ்மானுடன் போட்டி போடும் வைரமுத்து...
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களை கொண்டு தான் ருசி அறியும் ..
காதல் கொள்ளும் மனிதப் பூச்சி
கண்களை கொண்டு தான் ருசி அறியும் ...
...என்று அவர் சொல்கையில் அறிவியலில் குழைந்து காதலில் கரைகிறது பாடல்.
ரஹ்மானின் சமீப காலத்து செல்லப் பாடகர் விஜய் பிரகாஷ்...அவருடன் ஷ்ரேயா கோஷல். சொல்லவேண்டுமா இருவர்க்கும். இவர்கள் இருவர் குரலிலும் மகுடியிசைக்கு மயங்கும் சர்ப்பம் ஆகிறோம் நாம். மூளையின் ஒரு ஓரத்தில் செரோட்டனினும், என்டோர்பினும் சுரப்பதை என்னால் நன்கு உணர முடிகிறது.
மீண்டும் சொல்கிறேன், முடியலை சாமி....முடியலை.
அது சரி, என்னப்பா எந்திரன் படப் பாடல்களுக்கு விமரிசனம் எழுதுன்னா ஒரே பாட்டைப் பத்தி பேசிட்டு இருக்கன்னு சொல்றீங்களா? அட, இந்தப் பாட்டிலிருந்து நான் வெளியே வர இன்னும் நாலு நாள் ஆகுமுங்க. அதுக்கு பெறகு மத்த பாடல்களை பாக்கலாம்.
சரி சரி படிச்சது போதும், பாட்டைக் கேளுங்க....
.
.
.
image courtesy: onlysuperstar.com

