Nov 14, 2010

இசைக் கோலங்கள்: வீணையின் சரஸ்வதி

மாதங்களில் மார்கழிக்கு இருக்கும் மகத்துவம் வீணை இசைக்கலைஞர்கள் இடையே காயத்ரிக்கு உண்டு 
- இசை விமரிசகர் சுப்புடு


வீணை காயத்ரி அவர்கள் பூமிக்கு வந்த சரஸ்வதி
 - தினமணி நாளிதழ்


_______________________________


வீணையின் நாதத்திற்கு எப்போதுமே தனி மயக்கம் உண்டு எனக்கு. குரலில் கொண்டு வர இயலும் நெளிவு சுளிவுகளையும், குரல் வடிவின் குழைவுகளையும் கூட அனாயசமாக வெளிக்கொணர இயலும் ஒரு இசைக் கருவி வீணை மட்டும்தான் என நான் முழுமையாக நம்புவேன்.

அதிலும் வீணை காயத்ரியின் வாசிப்பில் வீணையின் நாதம் கேட்கும் சுகம் தனி.




வீணை E.காயத்ரி அவர்களைத் தமிழகத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 


அதென்ன வீணை காயத்ரி? தமிழ்நாட்டில் இவரை விட்டால் வீணை வாசிக்க ஆளே இல்லையா என்ன எனக் கேட்பவர்களுக்கு இவர் தன் அற்புத வீணை வாசிப்பின் மூலமே பதில் தருகிறார்.

உன்னத வாசிப்பு, மயக்கும் இசை, அபார ஞானம் என்றெல்லாம் இவர் வாசிப்பை எளிய வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

எனவே, ஒரு மிக எளிய உதாரணத்தில் காயத்ரி அவர்கள் மீட்டும் வீணையின் நாதத்தைக் கேளுங்கள். முகமது ரபி அவர்களின் கிளாசிக்களில் ஒன்றான இந்தப் பாடலில் நெஞ்சைத் தைக்கிறது வீணையின் தந்தி.



ஆறு வயதில் இவர் கைகள் வீணையிசைக்க ஆரம்பித்தன. கூடிய விரைவில் பொன்விழா காணவிருக்கிறது வீணைக்கும் இவருக்குமான பந்தம்.

ஒன்பது வயதினில் இசையுலகிற்கு பேபி காயத்ரி என அறிமுகமான இவர் தன் பன்னிரண்டாவது வயதிலேயே ஆல் இந்தியா ரேடியோவின் இசைக் கலைஞர் ஆனது இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று.

அதே பன்னிரண்டாம் வயதில் 1971'ல் இவர் வீணை வாசிப்பை "அது கடவுளின் மொழி" என டெக்கன் க்ரானிகல் (செகந்தராபாத்) குறிப்பிட்டது.

கர்நாடக இசை மட்டுமல்லாது, திரையிசை, கஜல், ஜாஸ், வெஸ்டர்ன், ப்யூஷன், கிராமிய இசை என இவர் மீட்டாத இசைப்பாணி இல்லை எனலாம். இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வரும் எல்லா நாடுகளிலும் இவர் வீணையிசைப்  பயணம் நிகழ்ந்துள்ளது.

இந்தியத் திரையிசையிலும் கூட இவரின் பங்கு குறிப்பிடும்படியானது. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார். 

 இவர் பெற்ற விருதுகளும் பட்டங்களும் ஒரு கட்டுரைக்குள் சொல்லி முடிக்க இயலாத அளவிற்கு உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை எம்.எஸ். அவர்கள் கரங்களால் இவர் பெற்ற இசைப்பேரொளி விருது மற்றும் இவரின் இருபத்தி ஐந்தாம் வயதிலேயே இவரை வந்தடைந்த கலைமாமணி விருது ஆகியவை.

காயத்ரி அவர்களின் வீணை மட்டுமே பேசும் என எண்ண வேண்டாம். Jasmine Strings என்னும் வலைப்பக்கத்தின் வாயிலாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன் ரசிகசிகாமணிகளிடம் உரையாடத் துவங்கியுள்ளார் இவர்.

வீணையின் மகத்துவம், சிறப்புகள், இசையுலகில் வீணை வாசிப்பில் ஜாம்பவான்கள் பற்றிய அரிய தகவல்கள், இசையின் மூலம் நோய் தீர்ப்பு பற்றிய தகவல்கள், மறைந்த இசை மேதைகளுக்கு புகழாஞ்சலி எனப் பலப்பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது இவர் வலைமனை.


காயத்ரி அவர்களின் வீணையிசைத் தொகுப்புகள் http://gvshobha.blogspot.com/
என்ற தளத்தில் கிடைக்கின்றன.


இந்தப் பதிவிற்கு வீணை காயத்ரி அவர்களின் கடிதம்.
.
.
.

9 comments:

எல் கே said...

நன்றி கிரி.

Giri Ramasubramanian said...

மிக்க நன்றி LK

பொன் மாலை பொழுது said...

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் பதிவின் கருத்துக்கள். நான் வீணை சிட்டிபாபு அவர்களின் தீவிர ரசிகன்.
அவரிடம் காயத்ரியும் வீணை பயிற்சியினை மேற்கொண்டதால் அவரின் வாசிப்பின் மீதும் எனக்கு காதல் உண்டு. இவர்களின் இசைதொகுப்புக்கள் எனிடம் உள்ளன. திரைப்படங்களில் கூட இவர்களின் வீணையின் நாதம் பொதிந்த பாடல்கள் அணைத்தும் என்றும் வாழும் அமர கீதங்கள்தான்.இனிமையான ஒரு இந்தி பாடலை காயத்ரியின் வீணையின் கானத்தில் கேட்க வைத்தீர்கள். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

nice boss! :)

Giri Ramasubramanian said...

@ மாணிக்கம்
எழுதினதின் நிறைவு உங்கள் பின்னூட்டம் படித்ததில் கிடைக்கிறது. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

@ ஜீ
ரொம்ப நன்றி பாஸ்!

natbas said...

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Giri Ramasubramanian said...

@ Natbas

ரொம்ப நன்றி

Philosophy Prabhakaran said...

மனதில் வீணை மீட்டியதற்கு நன்றி...

Giri Ramasubramanian said...

@ பிரபா
வாவ்! சூப்பர்! நன்றி நண்பரே!

Related Posts Plugin for WordPress, Blogger...