Nov 2, 2010

சன்-மணி-விக்ரம்-ஜெமோ கூட்டணியில் பொன்னியின்செல்வன்

ஊடகங்கள் யூகிக்கும் ஹேஷ்யங்கள் நிஜமானால்....

.... இந்த இடுகையின் தலைப்பு நிஜமாகவிருக்கிறது.

நூற்று சொச்ச கோடிகளுக்கு எந்திரனைப் படைத்த பின் அடுத்து என்ன என்ற விவாதம் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் வந்தபோது,  அமரர் கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்"என்ற முடிவிற்கு வந்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.

தமிழில் முக்கிய கதாநாயகப் பாத்திரத்தில் (வந்தியத்தேவன் - வேறு யார்?) விக்ரம் நடிப்பதாகச் செய்தி. தெலுகு வெர்ஷனில் மகேஷ் பாபு வல்லவரயுடு எனத் தெரிகிறது..

படத்தை இயக்குபவர்? நம்ம மணிரத்னம் என்கின்றன யூகங்கள். மொத்த பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் எண்பது சீன்களில் அடக்கி ஒரு அட்டகாச ஸ்க்ரிப்டை மணி ரெடி செய்து வைத்திருப்பதாகவும் கூடுதல் தகவல் சொல்கிறது.

அடுத்த தகவல்தான் இங்கே ஹைலைட்.....

படத்திற்கு வசனமெழுத சன் குழுமத்தால் ஜெமோ தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார். அவர்க்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம்...அம்மாடியோவ்... ரெண்டு கோடியாம் சார்...!!!
ஜெமோ'வை உ.த.எ. எனச் செல்லமாக அழைக்கும் கேங் பக்கம் காது கொடுத்த போது..

சன் பிக்சர்ஸ் நமக்கு ஆவாது....

மணியைக் கண்டா கொஞ்சமும் சரிப்படாது...

பரப்பிலக்கிய எழுத்தாளர் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் கதையையா, சொல்லவே வேணாம்!

ஜெமோவை அறவே புடிக்காது... 

ஒன் மோர் திங்.... இசைக்கு இளைய ராசாவைச் சேர்க்கச் சொல்லுங்கோ...

அட நம்ம ஆழ்வார்க்கடியான் பாத்திரத்துல கமல்ஹாசனை நடிக்கச் சொல்லுங்கப்பா...

நம்ம அண்ணன் அறிவுடைநம்பிக்கு.... அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு தமிழ்நாட்டையே கெட்ட கெட்ட வார்த்தையில அர்ச்சனை, மறு அர்ச்சனை, மறுபடி மறுபடி அர்ச்சனை செய்ய வகையாப் போச்சு.

(அதுவும் இந்த ரெண்டு கோடி சமாசாரம் மீண்டும் மீண்டும் (அ)ராத் தொந்தரவுகள் தந்து நள்ளிரவு இடுகைகளுக்கு வழிவகுக்கும்)

ஆட்றா சாமி ஆட்றா சாமி.... தையத் தக்கா தையத் தக்கா.....


7 comments:

natbas said...

நல்ல செய்தி ஆனா ஒரே ஒரு வருத்தம். நம்ம உலக நாயகனை வந்தியத்தேவனா நடிக்க வெச்சிருக்கலாம், பாவம், அது அவரோட ரொம்ப நாள் கனவு. அவருக்கு ஆழ்வார்க்கடியான் ரோலாவது கிடைக்குமா பாக்கலாம்.

"ஸஸரிரி" கிரி said...

நன்றி நட்பாஸ் சார். நான் மறந்த ஒரு விஷயம். இதையும் உள்ளடக்கத்துல சேத்துட்டேன்.

இந்த ஹேஷ்யங்கள் நிஜமானால், தமிழ்நாடு தாங்காது. அவனவன் தமிழ் இணைய உலகத்துல ஆறு மாசத்துக்கு வாயிலயும் வயித்துலயும் அடிச்சிப்பான்....!!

ராவணாவும் எந்திரனும் பாக்காத புது டைமேன்ஷனை தமிழ் இணைய தருதலைங்க வாயிலா பொ.செ. பார்க்கும். நல்லவேளை இந்த சில்லுண்டிப் பசங்க சாம்ராஜ்யத்துல அமரர்.கல்கி உயிரோட இல்லை.

Dhayanithi Sriram ( Astro ) said...

கிரி எப்படி தான் கண்டுபுடிச்சி எழுதுரிங்களோ.....
கலக்கிட்டிங்க... சூப்பர்..

"ஸஸரிரி" கிரி said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

மனசாட்சியே நண்பன் said...

அப்படியா நன்றி

Anonymous said...

ரூ176000 கோடியில் ஜெய மோகனுக்கு 2 கோடி பேரமா?

"ஸஸரிரி" கிரி said...

@அனானி
என்னய்யா வேணும் உனக்கு. குபீர்'ன்னு குதிச்சு சேமியா பாயசத்துல வெங்காயம் இருக்கான்னு கேக்குற?

Related Posts Plugin for WordPress, Blogger...