Mar 3, 2010

கட்டிப்புடி...இல்ல காலால் மிதி


பழம் நழுவிப் பாலில் விழுந்து
பாலே நழுவி வாயில் விழுந்ததுன்னு
நினைச்சு சிரிச்சது அந்த ருத்ராட்சப் பூனை.
அப்போ அதுக்கு தானே நழுவி,
 _____களின் கையில் விழப்போறது தெரியலை.
பாவம்!

(நன்றி: ஒரு நண்பர்!)


ஒண்ணா கட்டிப்புடி...இல்ல காலால் மிதி.  இதுதான் நம் ஸ்டைல்! நித்யானந்தாவின் ஆசிரமங்கள் சூறை! அவர் உருவப் படங்கள் எரிப்பு! இத்தனையும் செய்பவர்களில் சிலர் அவரை "சுவாமி சுவாமி" என நெக்குருகி அழைத்தவர்கள். பலர் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள், இவர்களுக்கெல்லாம் எப்படி தெருவில் இறங்கி இது போன்ற விவகாரங்களில் ஈடுபட நேரம் கிடைக்கிறது என நான் வியப்பதுண்டு. ஆண்டவா, இவர்களுக்கு நீ ஏன் ஐ,டி அல்லது பி.பீ.ஒ. துறைகளில் வேலை பெற்றுத் தரவில்லை?

நித்யானந்தர் பற்றிய செய்திகள் பற்றியெரியும் இந்நேரத்தில் கல்கி பகவான் பற்றியும் இன்று ஜூனியர் விகடனில் செய்தி ஒன்று வந்துள்ளது.

- நித்தியானந்தர் தனியறையில் ஒரு பெண்ணுடன் இருந்ததாக ஊரெல்லாம் வெளிச்சமடிக்கிறது சூரியன்.

- கல்கி பகவான் ஆசிரமத்தில் மேனாட்டு நிறுவனத்தில் பணி புரியும் விடலைப் பயல்கள் போதை போட்டுவிட்டு அரைகுறை ஆடையில் உல்லாச நடனம் ஆடுவதாகவும் பகவான் அவர்களும் போதையில் முயங்கிக் கிடப்பதாகவும் தொலைக்காட்சியில் வந்த சேதியை ஜூ.வி. கவர் செய்துள்ளது.

முதல் விஷயம் சாமியாரின் அத்துமீறல் அல்ல. அதை படம் பிடித்து வெளியிட்டவனின் அத்து மீறல். நீங்கள் சாமியாரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தாராமல், அவரை தெய்வமாகத் தொழ ஆரம்பிக்கும் நிலையில்தான் இது போல அவர் மீது காதல் கொள்ளவும், கோபம் கொள்ளவும் உங்களுக்குத் தோன்றுகிறது. அவர் சொல்லும் போதனைகள் உங்களுக்கு வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கா? "சரிங்க சாமி, ரொம்ப நன்றி", என்று சொல்லிவிட்டு உங்க வேலையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நேற்று சன் டிவி நிகழ்வுகள் எல்லாம் அவருடைய அந்தரங்கள் என உங்களுக்குப் புரியும். இந்த விஷயத்தில் கவலைப்பட வேண்டியவர் அந்த "R" நடிகை. அவர் ஒப்புதல் இல்லாமல் "அந்த" சம்பவம் நடந்ததா? இந்த வீடியோவை சாமியார் வெளியிட்டாரா? என்பது போன்ற கேள்விகளை அவர் சாமியாரிடம் கேட்டுக்கொள்ளட்டும். அல்லது அந்த "R" அந்த வீடியோவை வெளியிட்டாரா என சாமியார் அந்த நடிகையின் சிண்டைப் பிடிக்கட்டும். நம் வேலையாக நாம் அந்த "idiot box" பக்கமிருந்து நம் குழந்தைகளைக் காக்கும் வேலையைப் பார்ப்போம்.

மேலும், இதில் நிறைய உள்குத்து விவகாரங்கள் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சாமியாருக்குத் தொழில் ரீதியான எதிரிகள், அரசியல் ரீதியான எதிரிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது வேறு நிகழ்வுகளில் இருந்து ஒட்டுமொத்த தமிழகத்தை  திசை திருப்ப இந்த ஆயுதத்தை ஆளும் கட்சியினர் சன் துணையுடன் எடுத்திருக்கலாம்.

அடுத்து, கடவுளை இல்லை என்று சொல்லும் பெரியார் இயக்கத்தினருக்கு சாமியாரிடம் எந்த வேலையும் இல்லை. அவரிடம் காசு கட்டி ஏமாறத் தயாராய் நிற்கும் ஏமாளிகளிடம்தான் அந்த இயக்கத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.. நித்யானந்தா இல்லையென்றால் ஒரு சத்யானந்தாவிடம் செல்லத் தயாராக இருப்பவர்களுக்கு ஏதேனும் பகுத்தறிவு புகட்டட்டும் இவர்கள்..

அப்புறம் அந்த இரண்டாம் விஷயம் இப்போதைக்கு limelight'ல் இல்லை. ஆகவே, அப்புறம் பார்ப்போம்.

4 comments:

Raghu Bhaskar said...

Indha maadhiri road la irangi adi thadi panravanunga ellam onnaa directly affected people a irukkanum illainna vela vetti illaadhavanungala irukkanum.... vere yaarukkum time illai....

Kali muthi pOchu....

Karthik Ram said...

what swami did was wrong. Don't blame others for his behavior. He teaches bramhacharyam, he's not suppose to do these things.

Giri said...

@ Kathik - Again thanks. I am not supporting Swamiji. My sarcastic poem says it all @ the beginning itself. What I said was I do not want this ugly thing to be broad-casted on my television on a 24/7 basis.

quanchi said...

Namadhu Makkal Pavam Giri... 24X7 Idoit boxil podavittal, Ippadi oru Vishayam nadandathu enbatheye marandhu viduvargal...

Oru padathil Vivek solvathu pol... "Our country people are suffering from Amnesia"

Related Posts Plugin for WordPress, Blogger...