Mar 14, 2010

குறுக்கே ஓர் நேர் வழி!

காட்சி 1:
இடம்: சென்னையின் ஒரு RTO அலுவலகம்.
"சார், என்னோட 4 வீலர் லைசென்ஸ் எக்ஸ்பயர் ஆகிடுச்சி, புதுப்பிக்கணும்"


சிலப்பல வாரங்கள் மற்றும் சிலப்பல கவனிப்புகளுக்குப் பின்:
"நன்றி சார்"


காட்சி 2:
சில வாரங்களுக்குப் பின்...
இடம்: அதே RTO அலுவலகம்.
"சார், என்னோடது கார் லைசென்ஸ். நீங்க மோட்டார் சைக்கிளுக்கு ரெனியு பண்ணி குடுத்திருக்கீங்க".
"அப்படியா", ஒரு வியப்பான பார்வையைத் தொடர்ந்து, "உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா?"
"நான் கடந்த முப்பது வருஷத்துக்கும் மேலே கார் ஓட்டிட்டு இருக்கேன் சார்".
"ஓ, அப்படியா? ஒரிஜினல் லைசென்ஸ் எங்க எடுத்தீங்க?, ஓகே, கோயமுத்தூர்லயா ? அப்போ அங்க இருந்து ஒரு NOC வாங்கிட்டு வந்துடுங்களேன்".


காட்சி 3:
கோவை RTO அலுவலகம்.
"இதெல்லாம் இங்க வரணும்னே அவசியம் இல்ல சார். இதுல எங்களுக்கு செய்ய ஒண்ணும் இல்லை. நீங்களே அங்க போயி கொஞ்சம் அழுத்தி (!!) சொல்லுங்க, அவங்க சென்னைலயே பண்ணி குடுத்துடுவாங்க".


காட்சி 4:
மீண்டும் அதே சென்னை RTO அலுவலகம்.
"சார் உங்களுக்கு சொன்னா தெரியாதா? நாங்க அப்படியெல்லாம் கண்டமேனிக்கு உங்களுக்கு ரெனியு பண்ண முடியாது சார்"
"சார், என்கிட்டே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் கூட இருக்கு"
"அதுக்கு எங்கள என்னை பண்ண சொல்றீங்க"
(மனசுக்குள்ளாக: "வேற வழியே இல்ல! பிரம்மாஸ்திரத்த உபயோகிக்க வேண்டியதுதான்) "உங்க RTO-வை நான் பார்க்க முடியுமா?"
"என்ன, புகார் குடுக்கப் போறீங்களா?, சரி போங்க, அந்த ரூம்லதான் இருக்காரு.


காட்சி 5:
RTO தலைமை அலுவலர் அறை.
காட்சியமைப்பு: கிட்டத்தட்ட பாட்ஷா படத்தில் கல்லூரி முதல்வரிடம் ரஜினி "உண்மையை" சொல்லும் காட்சியமைப்பு.


"அவங்க என்ன சொல்றாங்களோ அதே  மாதிரி பண்ணிடுங்க சார், இதுல நான் தனிய சொல்ல ஒண்ணும் இல்லை"
"சரி, ஒரு போன் பண்ணிக்கறேன் சார்.... " ஆங், மாமா நான் _____ பேசறேன், _______ RTO ஆபீஸ்ல இருக்கேன், இது மாதிரி அது மாதிரி நெலைமை"
மறுமுனையில், "நம்ம பேர சொன்னீங்களா மாப்பிள்ளை?"
"இல்ல மாமா".
"சொல்லுங்க, அந்த ஆபீசர் நம்ம ஊரு மனுஷன்தான்.பண்ணி குடுத்துடுவாரு"
"சார், RTO சார், நான் நம்ம சட்டப்பேரவை ___________வோட வீட்டு மாப்பிள்ளை"
"என்ன... என்ன சொன்னீங்க....ஒரு நிமிஷம் இருங்க", போனை எடுத்து. "யோவ், அந்த _________ இருக்காரா, வர சொல்லுய்யா.....
....என்னையா, நமக்குத் தேவையா? நாளைக்கு சட்டசபைல நம்ம ஆபீஸ், என் பேரு எல்லாம் உருளும்யா. நேரத்துக்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்கய்யா!"


நீதி: சந்து பொந்துகளில் புகாமலும், சம்திங் கொடுக்காமலும் நேர் வழியில் செல்ல நீங்கள் நினைத்தால் அது ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சுற்றுவழிதான்.

5 comments:

thirumalai said...

ஓஹோ, இப்படி ரௌடியை வெச்சு மிரட்டறது உங்க ஊர்ல நேர் வழியா? வாழ்க சனநாயகம்!

Giri said...

திருமலை, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

நான் அப்படி சொல்லலீங்கோ! நீங்க நேர்வழில போக நெனச்சா முட்டு சந்துதான் கதின்னு சொல்றேன். சரியோ தவறோ...இப்படித்தான் பிழைப்பு செல்லுது.

அண்ணாமலையான் said...

எப்டியோ பொழைக்க தெரிஞ்ச ஆளுங்க நீங்க...

வடுவூர் குமார் said...

கொதிக்குது!!

Giri said...

திரு.அண்ணாமலை மற்றும் குமார்....தங்கள் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...