Mar 30, 2010

தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள தளபதி அய்யா அவர்களுக்கு,

வரலாற்று சிறப்பு மிக்க பெரம்பூர் மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டதில் பேரானந்தமும் பேருவகையும் கொண்ட லட்சக் கணக்கான வடசென்னை மக்களில் நானும் ஒருவன். பெரம்பூர் மேம்பாலப் பணி முடிந்ததன் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு ஊரறிந்தது. தங்கள் திருப்பணி மென்மேலும் தொடரவும், கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் என்றும் முன்னிலை வகிக்கவும் வேண்டும் என்பதே என் போன்றோரின் ஆவல்.

சுற்றி வளைக்காது சொல்ல வந்ததை சொல்கிறேன், கடந்த வெள்ளி மற்றும்  சனிக்கிழமைகளில் பெரம்பூர் மேம்பாலம் திறக்க வருகை புரிந்த உங்களையும் கலைஞர் அய்யா அவர்களையும் வரவேற்க வட சென்னையே தயாரானது....தெருக்கள் தோறும் பேனர்கள், வீதிகள் தோறும் வரவேற்பு வளைவுகள்... டவுட்டன் பகுதியிலிருந்து பெரம்பூர் பேருந்து நிலையம் நோக்கி என் பைக்கில் பயணித்தேன்....நான் இந்த இருபது வருடங்களில் கண்டிராத வண்ணம் சாலைகள் செப்பனிடப்பட்டு அத்துணை குண்டு குழிகளும் மறைக்கப் பட்டு, சாலையின் இருமருங்கிலும் நடைமேடைகள் வெள்ளை கருப்பு நிறப்பட்டை அலங்காரங்கள் அணிந்து, நான் பயணிப்பது வடசென்னை சாலை ஒன்றில்தானா  என எனக்கே ஐயம் ஏற்பட்டது. இத்துணை விரைவாக நான் என் இலக்கை வட சென்னையில் அடைந்ததில்லை. ஏன் இந்தப் போலிப் பூச்சு, யாருக்காக, யாரால் அரங்கேற்றப் படுகின்றன இந்த நாடகங்கள்? 

எங்கிருந்து திடீரென முளைத்தது இப்பணியினைச் செய்யச் செலவிடப்பட்ட நிதி? நீங்களிருவரும் வாராது போயிருந்தால், பாலம் திறக்கப் படாதிருந்தால் என்னவாகியிருக்கும் இந்தப் பணம்? இதை மறுபக்கமிருந்து யோசித்தால், தமிழகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் இப்படி சாலைகளிட்டு இழைக்க நிதி இருக்கத் தானே செய்கிறது. அது எங்கே எப்படி இறைக்கப்படுகிறது? என் கேள்விகள் ஒருவழிப் பயணம் செய்யும் பதில்களற்ற கேள்விகள் என்பதை  நானறிவேன். 

குறைந்தபட்சம் இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன்.

1) நாங்கள் நிதமும் பிரயாணம் செய்யும் அனைத்து சாலைகளையும் "டவுட்டன் முதல் பெரம்பூர் மேம்பாலம் வரை" செப்பனிடப்பட்ட சாலையை மாதிரியாகக் கொண்டு எந்த ராணுவ அவசரத்தில் துரித கதியில் இந்தச் சாலை சரி செய்யப் பட்டதோ அதே துரித கதியில் சரி செய்து தாருங்கள்.

2) அல்லது, நாங்கள் பயணிக்கும் அதே வகை சாலையில் செப்பனிடும் வேலையேதும் மேற்கொள்ளாது நீங்களும் என்றும் எப்போதும் பயணம் செய்யுங்கள். நீங்களும் மக்கள் தொண்டர்கள்தான் அல்லவா? நம் பயணங்கள் இனி ஒன்றாய்த் தொடரட்டும். 

அன்புடன்,
கிரி

தொடர்புடைய என் முந்தைய இடுகைகள்:

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..


5 comments:

Chandra said...

Excellent one Man.. You have good and smart skills in your narration. Short and sweet and what you wanted to say/ask is crystal clear. Keep doing it.

First of all, either MK or MKS is also a citizen of India like us then how come anyone can tolerate that roads are repaired and well decorated when they visiting a area.. Is it like other citizens are stupids and do not contribute anything towards to the growth of our state/country.Or not at all eligible to ride on a smooth road. We know their capability and what they have been doing for quite a few years. I am sure that many might be living in Perumabur who have done lot for our country. Why do you and your family need such sophistication in life and what would happen if you drive on road with many bumps and dumps.

As you mentioned, its just our frustration and we keep talking and writing about the same years to years. Nothing will change. Basic problem with the middle and upper class is, we think and talk a lot, but nothing will become actionable. Yes that's true we have our own family and responsibilities. if we spare sometime to involve us infighting for the good cause then who will take of our own bloods those who are dependent only on us. the poor class is in hands of politicians and they cannot be blamed for anything as they are not educated enough to understand what is going around us and they are like thanjuar toy shakes their hand to the direction of twist and hit.. and here money and power control them. And the upper class do not have any worry at all. as they are well influenced and got money to do whatever they wish to do. If perumber is not good area to live they can move to Poaes garden as they have money.. they dont need to fight for anything.

whomsoever comes there is nothing that will change all these hurdles over a night. But lets not stop hoping for the best. We have been seeing good growth economically after independence and its our own efforts and hard work that is paying for us and keep us to grow and will have hope this to continue.

Samora

zzz... said...

மனசிருந்தால் மார்க்கமுண்டுன்னு சொல்லுவாங்க... அதை இந்த பெரம்பூர் மேம்பாலத்துலக் காட்டிட்டாங்க பாத்தீங்களா...

அதையே அன்னாடம் செய்யணும்னா, ஆட்சியாளர்களை சொல்லிக் குத்தமில்லே... அவங்க அவங்க அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்யணுங்கற எண்ணம் வரணும். ஒருத்தன் என் வேலையைக் குத்தம் சொல்லக் கூடாதுங்கற சுயமரியாதை இருக்கணும்...

இதெல்லாம் மக்களோட மனப்போக்கில ஏற்பட வேண்டிய மாற்றங்கள்...

Giri said...

@ Samora: Thanks so much for taking time to reply me. I can see the same frustration reflecting your side which I too have. But, I avoided being too attacking as I need to avoid any attacks on me :-)\

@ zzz... நன்றி அய்யா! உங்கள் கருத்தை முழுதும் ஒப்புக்கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

பால‌த்தில் ப‌ள்ள‌ம் விழாம‌ல் இருக்க‌ வேண்டுவீர்க‌ளா! அதை விட்டுவிட்டு...
ச‌ரியான‌ கேள்வி தான் ஆனால் ஒரு வ‌ழி ப‌தில் தான்.

Giri said...

@ வடுவூர் குமார்!
நல்லா சொன்னீங்க போங்க!

Related Posts Plugin for WordPress, Blogger...