Mar 17, 2010

உபயோகம் கொள்(ளை)






டெக்னோ உலகில் உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?

இணைய மென்பொருள்கள்? - உண்டு
விண்டோஸ் பற்றிய புதுப் புது தகவல்கள்? - இருக்கு
ஆன்லைன் ஆப்லைன் கேமிங் குறித்த தகவல்கள்? - இருக்கு சார்!
போட்டோஷோப் உபயோகிக்க டிப்ஸ்? - தருகிறார்கள்.
ட்விட்டர் / பேஸ்புக் உபயோகக் குறிப்புகள் - நிறைய உண்டு
MAC ./ Linux தகவல்கள்? - படிக்கலாம் அய்யா!
மொபைல் மென்பொருட்கள் பற்றி? - விரிவான தகவல்கள் தரப்படும்

எல்லாம் எங்கேன்னு கேட்கிறீர்களா? makeuseof இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

இன்னும் வேறு என்ன வேண்டும் உங்களுக்கு...  இணையம், மென்பொருட்கள், கம்பயூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்கள்?

இணைய தகவல் தொழில்நுட்பத்தில் என்ன புதுசு, டெக்னோ உலகில் சுடச்சுட என்ன செய்தி உலவுகிறது, புதியதாய் என்ன சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன் வந்துள்ளது அதன் மதிப்பு மரியாதை என்ன என அக்குவேறு ஆணிவேராக அலசலாம்.

தினமும் குறைந்தது ஐந்து டெக்னோ இணையதள அறிமுகங்கள் கிடைக்கின்றன. கல்வி சம்பந்தப்பட்ட தளங்கள் குறித்த பரிந்துரைகள் தருகிறார்கள், அப்பாவுக்கு கிரீட்டிங் கார்டு செலக்ட் செய்ய சிறந்த தளங்களைப் பட்டியல் இடுகிறார்கள், சிறப்பாகப் புகைப்படம் எடுக்க டிப்ஸ் தருகிறார்கள், எக்ஸ்செல்லில் கிராப் போடும் முறை குறித்து விரிவாக விளக்குகிறார்கள்....இப்படி பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

இத்தளத்தைத் தொடர்ந்து படித்து வருவதால் சில டெக்னோ புலிகளிடமே சவடால் விடுமளவு நமக்கு அறிவு வளர்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

என் பரிந்துரை: இந்த தளத்தை google reader போன்ற RSS feed reader மூலம் தொடர்ந்து வருதல் நலம்.

இணையதள முகவரி: http://www.makeuseof.com/
RSS இணைப்பு: http://feedproxy.google.com/Makeuseof

4 comments:

natbas said...

very useful link, thanks.

Giri Ramasubramanian said...

@ zzz...
vanakkam....vandhanam...swagatham Guru!

பத்மஹரி said...

மிகவும் உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி.
(என் வலைப்பக்கத்துல உங்க மறுமொழியப் பார்த்துதான் இங்கே வந்தேன். உங்க ஊக்கத்துக்கு மிக்க நன்றி. நீங்களும் கலக்குறீங்க.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!)

Giri Ramasubramanian said...

பத்மஹரி, மிக்க நன்றி உங்கள் வருகைக்கு, கருத்திற்கு, ஊக்கத்திற்கு!

Related Posts Plugin for WordPress, Blogger...