Mar 30, 2010

சுறா - பாட்டு இல்லீங்க்ணா புட்டுங்கண்ணா




சுறா - இசை விமரிசனம்!



காலத்தின் கட்டாயம் இந்தப் படப் பாடல்கள் ஹிட்டாகப் போவது உறுதி. கலாநிதி மாறன் & கோ'விடமிருந்து வெளிவரும் எதுவுமே ஹிட் என்பது எழுதாத சட்டமாயிற்றே!


சரி...பாடல்களைப் பற்றி.....








இளைய தளபதி விஜய் 

"தமிழன் வீரத் தமிழன், தலைமை தாங்கும் ஒருவன், நெற்றிக்கண் திறப்பான், துயரம் நேர்ந்த இடத்தில் தோள் கொடுப்பான்... என்று வழக்கம் போல் அண்ணன் புகழ் ஏற்றும் ஒரு பாட்டு...

படத்தில் சரேலென வரப்போகும் ஒரு ரொமாண்டிக் டூயட் - "சிறகடிக்கும் நிலவு". ஏதோ ஒரு பழைய பாடலை நினைவூட்டுகிறது...

"தஞ்சாவூர் ஜில்லாக்காரி, முந்தானைத் தோட்டக்காரி"  (ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ  நா.முத்துக்குமார்?) - இது இன்னொரு டூயட். 

மேலும் ஒரு சுய விளம்பர டூயட்: "நான் நடந்தால் சரவெடி..." -  no comments!

"காக்கைக்கொரு கூடு உண்டு...ஏழைக்கு இங்கே வீடு எங்கே உண்டு" என ஏழை பாழைகளைப் பார்த்து காலாகாலமாய் நம் கதாநாயகர்கள் கிண்டல் செய்துவரும் இன்னொரு பாட்டு "வெற்றிக் கொடி ஏத்து!" (இந்த வகைக் கிண்டல்களை இன்னும் நம் மக்கள் புரிந்து கொள்ளாதது துயரம்) - இந்தப் பாடல் ஓபனிங் பாடலாக இருக்கக் கூடும். பாடலை எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர். ரஜினின்னு எல்லோருக்கும் இப்படி எழுதியாச்சு...நம்ம விஜய்க்கும் எழுதுவோன்னு...???

இன்னும் ஒரு பாட்டு இருக்கு...(வங்க கடல் எல்லை ) அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு கெடைக்கலை. 

மத்தபடி, நீங்க கேளுங்க கேளுங்க....கேட்டுட்டே இருங்க....!! எப்டியோ போங்க!

1 comment:

mani said...

\\ நீங்க கேளுங்க கேளுங்க....கேட்டுட்டே இருங்க....!! எப்டியோ போங்க!//
இது தான் எங்கள் விதி.....

Related Posts Plugin for WordPress, Blogger...