Jan 6, 2011

நண்பகல் நாய்கள்...


"பிடித்த கவிதை" என நாளை வெள்ளிக் கதம்பத்தில் வர வேண்டியது. ஆனால், என் சிலாகிப்பைப் பகிர்ந்து கொள்வதை அதுவரை தள்ளிப் போட இயலாததால்...இப்போதே!




நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர்துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலினின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும்   நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?


- ஞானக்கூத்தன்

(அன்று வேறு கிழமை தொகுப்பில் உள்ள கவிதை)

.
.
.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...