May 3, 2011

பிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808


இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயினின் மீதான பிரெஞ்சு ஆதிக்கத்தின்போது வெடித்த புரட்சியைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினரால் புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் ஓவியம் இது. சரியாக இருநூற்று மூன்று ஆண்டுகள் முன் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வைச் சித்திரம் ஆக்கியிருக்கிறார் பிரான்சிஸ்கோ கோயா. தாக்குதலில் மேலோங்கியிருப்பவனின் அழிக்கும் கோரமுகம் இந்த ஓவியத்தில் பதிவு செய்யப்படாமலேயே; இந்தக் கொடூரத்திற்கு இரையானவர்களின் மன்றாடுதல்களையும், ரத்தத்தையும் வைத்துப் பேசியிருப்பது ஓவியத்தின் சிறப்பு.




மாடர்ன் ஆர்ட்'டின் தந்தை எனக் கருதப்படும் பிரான்சிஸ்கோ கோயா (Francisco Goya) ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பதினெட்டாம் நூற்ற்றாண்டின் ஓவியர். கோயா ஸ்பானிய அரண்மனை ஓவியராக இருந்ததுடன் ஒரு வரலாற்று எழுத்தாளராகவும் இருந்தார். இவர் பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. இவ்வாறாக இவருடைய ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களில் மனே, பிக்காசோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். <நன்றி: விக்கி>



"மே 3 1808" சம்பவம் குறித்த விரிவான விக்கி பக்கம்  

பிரான்சிஸ்கோ கோயா குறித்த எஸ்.ரா.வின் பதிவு: கோயாவின் நிழல்கள்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...