May 25, 2011

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - சேலையூர்


"என்ன சார் இது அநியாயம்! அஞ்சு கவுண்டர் இருக்கு மூணு பேர்தான் இருக்காங்க, யாரும் கேக்க மாட்டீங்களா?"

"நீங்கதான் கொஞ்சம் கேளுங்களேன் சார்? பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு யோசிச்சிட்டே எல்லாரும் இருந்தா எப்புடி?"

"அட, நான் ரீஜனல் ஆபீஸ் வரைக்கும் எழுதிட்டேன் சார். ஒரு நடவடிக்கையும் இல்லை"

"இந்த பிரான்ச் இப்படித்தான் சார். சண்டே வந்து பாருங்க, மெயின் ரோடு வரைக்கும் க்யூ நிக்கும்"

"ப்ரைவேட் பேங்க் எல்லாம் எப்படிக் கொழிக்கறாங்கன்னு இப்போ இல்ல புரியுது"

"சார் பென்  இருக்குமா"

"திருப்பி குடுத்துடுங்க நியாபகமா"

"இந்தாங்க சார், தேங்க்ஸ்!"

"குட் மார்னிங் மேடம்! ஏற்காடு டிடி எடுக்கணும், எந்த கவுண்டர்!"

"வெளியில போயி டோக்கன் ரிசீவ் பண்ணிட்டு வாங்க"

"வெளியில?"

"ஆமாம், வெளியில...."

"தேங்க்ஸ் மேடம்"

 "சார், டோக்கன் நம்பர் நூத்தி நாப்பத்தி அஞ்சு"

"ஒக்காருங்க! இப்போதான வந்தீங்க! எனக்கு தொண்ணூத்தி மூணு! ஒண்ணரை மணி நேரமா வெயிட் பண்றேன். இப்போதான் எழுவத்தி ரெண்டு போயிட்டு இருக்கு. கவுண்டர் தெறந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு. உங்களுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்"

"என்னது! எனக்கு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு டிடி எடுக்கணும் சார்! அவ்ளோதான். அதுக்கும் அதே கவுண்டர்தானா?"

"எல்லாம் சிங்கிள் விண்டோ'தான். ஒக்காருங்க"

"என்னங்க, அஞ்சு கவுண்டர்ல மூணுலதான் ஆட்கள் இருக்காங்க?"

"அதைத்தானே நாங்க இத்தினி நேரமா பொலம்பிட்டு இருக்கோம்!"

"ஹலோ மேடம்! அந்த ரெண்டு கவுண்டர்'ல சர்வீஸ் இல்லையா?"

"இல்லைங்க, இன்னைக்கு லீவு"

"ஸ்டாஃப்'தானே மேடம் லீவு, சர்வீஸ் எப்படி க்ளோஸ் ஆகும்? ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் நீங்கதானே பண்ணனும்"

"உள்ளே மானேஜரைக் கேளுங்க"

"சொல்லுங்க சார், என்ன வேணும்?"

"மானஜரை பாக்கணும்"

"வெயிட் பண்ணுங்க, வருவாரு"

"இன்னும் வரலையா"

"வந்துடுவாரு"

"இல்லை, நான் ஆபீஸ் வந்துட்டாரான்னு கேட்டேன்"

"ஆன் டியூட்டி'ல கஸ்டமர் யாரையாவது பாக்கப் போயிருப்பார். ட்வெல்வ் ஓ கிளாக்'குக்கு வந்துடுவாரு, வெயிட் பண்ணுங்க"

"வெளங்கிடும்! ஆணியே புடுங்க வேணாம். நான் வர்றேன்"

ஆன்லைன் ட்ரான்ஸ்பர் எல்லாம் இருக்கற கம்ப்யூட்டர் யுகத்துல டிடி எடுக்கறதே கிரிமினல் குற்றம். இதுல ஆயிரம் ரூபா டிடி எடுக்க ரெண்டு மணிநேரம் வெயிட் பண்ணனுமா? போங்கய்யா நீங்களும் உங்க கஸ்டமர் சர்வீசும்!

10 comments:

Ramani said...

சேலையூர் என்ன எல்லாஊரிலேயும் இப்படித்தான் இருக்கு கதை
நீங்க டெபாசிட் பண்ணவேனும்னு சொல்லிப்பார்த்திருக்கலாம்
தீயாய் இருப்பாங்க
அனைவரின் மனங்களையும் அப்படியே பிரதிபலித்த நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கிரி ராமசுப்ரமணியன் said...

நன்றி ரமணி சார்!

//நீங்க டெபாசிட் பண்ணவேனும்னு சொல்லிப்பார்த்திருக்கலாம்
தீயாய் இருப்பாங்க//
அது கரெக்ட்தான்.

Anonymous said...

மந்தவெளி யிலும் அதே கதை தான். கவுண்டர் உண்டு ஆள் கிடையாது.
ஆள் இருக்கிற கவுண்டரிலும் வேறு வேலை பண்ணிக் கொண்டிருப்பார்கள்
சின்சியரா எதாவது ஒரு கவுண்டரில் வேகமாக டோகேன் கிளியர் ஆகும்

Rathnavel said...

தனியார் வங்கியில் சென்று பாருங்கள். உதாரணத்திற்கு 'தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்' போய் பாருங்கள். என்ன அருமையாக பணி புரிகிறார்கள் என்று.
வாழ்த்துக்கள் கிரி.

SBI said...

chairmansbi.customer@sbi.co.in
dgm.customer@sbi.co.in.

DO Mark a cc mail to these peoples and lets see some thing is happening or not

விஜயன் said...

எல்லா ஊரிலேயும் இதே கன்றாவி தான்.யாராவது தெரிஞவங்க வந்துட்டா போதும்,அவங்களுக்கு கூட இருந்து எல்லா வேலையையும் செஞ்சு குடுத்துட்டு தான் அவங்கங்க சீட்-டுக்கே வருவாங்க. . .
அதுவும் மதியம் போயிட்ட அவ்வளவு தான்,லஞ்சு பிரேக்-குன்னு 1 மணியில இருந்து 3 மணி வரைக்கும் சீட்-டுக்கே வர மாட்டாங்க. . .
MUTUAL FUND INVESTMENT-க்காக எனக்கு செக் புக் வாங்க நான் அலைஞ்ச அலைச்சல் இருக்கே. . .அப்பப்பா. . .
Private bank-ல ATM-ல பதிவு செஞ்சாலே போதும்,செக் புக் வீட்டுக்கு வந்துடும். . .
இந்த அனுபவம் யெல்லாம் எனக்கு Kumbakonam SBI-ல கெடைச்சது . . .

MANO நாஞ்சில் மனோ said...

உள்ளே மானேஜரைக் கேளுங்க"

"சொல்லுங்க சார், என்ன வேணும்?"

"மானஜரை பாக்கணும்"

"வெயிட் பண்ணுங்க, வருவாரு"

"இன்னும் வரலையா"

"வந்துடுவாரு"///

செம காமடி ஹா ஹா ஹா ஆனால் வேதனையா இருக்கு ம்ஹும், பல பேங்க்'ல இந்த நிலைமைதான்...

MANO நாஞ்சில் மனோ said...

என் ஆர் ஐ அக்கவுண்ட்'ல பணம் எடுக்க போனப்ப எனக்கும் இப்பிடி நடந்துச்சி, நேரே போயி மேனேஜர்கிட்டே இங்கிலிபீசுல பேசி நோகடிச்சிட்டேன், ம்ஹும் அப்புறம் பாருங்க நான் எப்போ போனாலும் ஆபீஸ்'ல உக்கார வச்சி பணம் எடுத்து தருவாயிங்க, ஹி ஹி ஹி நீங்களும் டிரை பண்ணி பாருங்க வொர்க் அவுட் ஆகலாம்..

என் நடை பாதையில்(ராம்) said...

SBI internet banking password இல் mobile number மாற்றுவதில் எனக்கொரு சிக்கல். இது பத்தி கேக்க தெரியா தனமா manager ரூம்க்கு போய்டேன். "அதெல்லாம் எங்க bank ல தரதில்ல. நீங்க வேணா account எ குலோஸ் பண்ணிக்கங்க நு" சொன்னார் அந்த அறிவு ஜீவி.

DrPKandaswamyPhD said...

டெபாசிட் பண்ணனும்லானும் இதே கதைதான். அவனுகளுக்கு சம்பளம் வந்தாப்போதும்.

Related Posts Plugin for WordPress, Blogger...