Nov 5, 2011

மௌனமே உன்னிடம்பாடுகிறேன் ப்ராஜக்டைக் கையிலெடுத்ததும் முதல் சில தினங்கள் கையில் மொபைல் வைத்துக் கொண்டு ரொம்பவே கேஷுவலாகப் பாடிக்கொண்டிருந்தேன். பின் லோக்கலாக ஒரு இன்டர்நேஷனல் மைக் வாங்கி கம்ப்யூட்டரில் செருகி வைத்துக் கத்தத் தொடங்கினேன். நன்கு பழகின பாடல்களை நான்குவரி பாடி வலையேற்றிக் கொண்டிருந்தேன்.

வலையுலக அன்பர் ஒருத்தர் பர்சனலாகக் கொடுத்த அட்வைஸ்'கள் ப்ராஜக்ட்டில் கொஞ்சம் சீரியஸ்னஸ் கொள்ளச் செய்தது. இப்போது பழகிய பாடல் எனினும் தினமும் பாடுமுன் பாடலை ஒன்றுக்கு நான்குமுறை   கேட்டுவிட்டு நான்கிற்கு எட்டுமுறை ரிகர்சல் பார்த்துவிட்டுப் பாடத் துவங்கினேன். சிஸ்டத்தில் எப்போதோ சேமித்து வைத்திருந்த கரோக்கி'களைப் பீராய்ந்து எடுத்து அவற்றுடன் குரலை ஒட்டவைத்தது அடுத்த கட்டம்.

சில பாடல்களைப் பாடுவதற்குமுன் பத்துமுறை கேட்பதுண்டு. ஆனால்,  இந்தப் பாடலைக் கையிலெடுத்தபோது கிட்டத்தட்ட நூறுமுறை மறுபடி மறுபடி கேட்டிருப்பேன். காரணம் என் பாடுதலை நேர்த்தி செய்து கொள்வதற்காக அல்ல, இந்தப் பாடல் கொண்ட நேர்த்தியினை மீண்டும் மீண்டும் வியப்பதற்காக.


ஓர் ஆணின் மனதில் பூத்தக் காதலை ”யெஸ்! இது காதல்தான்!” என அவன்  தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சூழலை இதைவிட அழகாக யாராலும் படமாக்கியிருக்க முடியாது. ராதாமோகன் அதை அநாயசமாகச் செய்திருக்கிறார். சூப்பர்ப் சார்!

வித்யாசாகர் ஒரு மெலடி கிங் என்பது நாம் சொல்லித் தெரிய அவசியம் இல்லை. தமிழ்த் திரையுலகம் அவர் திறமையை இன்னமும் கூட சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்வேன் நான். அவர் இசையில் வெளிவந்த டாப்.5 மெலடிகளில் இந்தப் பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு.

பாடலின் பெரிய ப்ள்ஸ் ஸ்ரீனிவாஸின் குரல். பாடலுக்கு உள்ளே கொண்டு சென்று நம்மை லயிக்க வைக்கும் தேனில் குழைத்த குரலில் மனிதர் என்னமாய் அசத்துகிறார்?

“சொல்லைக் கடந்த பெண்ணின் மௌனக் கூட்டுக்குள் பல கோடி கோடி பொருள் குடியிருக்கும்” என்ற வரிகள் வைரமுத்துவிற்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், நமக்கு “ஆஹா! அடடா!”.

ஆனால், இத்தனை பேரையும் எடுத்து விழுங்கும் ஒரு நபர் இந்தப் பாடலில் இருக்கிறார், அவர் படத்தின் ஹீரோ பிரித்விராஜ். பாடலுக்கு முன்னதாக வரும் வசனங்களின் போது முதல் நாற்பது வினாடிகளைக் கவனியுங்கள். மனிதர் நடிப்பதேயில்லை, ஜஸ்ட் ஒரு நிலைத்த பார்வையை வைத்தே ஆயிரம் பாவங்களை (Bhaavam) அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார். க்ரேட் ப்ரித்வி!

2 comments:

Erode Nagaraj... said...

உண்மை.

கிரி ராமசுப்ரமணியன் said...

வாங்கோ நாகராஜ் சார்! நன்றிகள்1

Related Posts Plugin for WordPress, Blogger...