May 6, 2012

மறுபடியும்....


நீ சுட்ட கை முறுக்கு; இரண்டு மணிநேரம். உன் அண்ணன் முறுக்கின கைமுறுக்கு; இம்மீடியட்டு. பேதியாவுறத சொன்னம்மே!

கர்மா ப்ளேஸ் எ பிக் ரோல், வில் ஹிட் பேக்” - அண்ணே அது நடந்து பன்னிரண்டு மாசமாச்சண்ணேய்!

டோண்ட் மிஸ்: டீம் வொர்க்’னா என்ன, ப்ராக்டீஸ் மேக்ஸ் பர்ஃபெக்ட்’க்கு அர்த்தம், இன்னும் நிறைய சொல்லும் ஒரு விடியோ http://t.co/oKK82wL6

அழுக்கான போர்வை, அழகான ஆந்தை, அடர்ந்த முட்செடிகள், அடித்து உடைத்த பீர்புட்டி, ஐந்தாறு பீடித்துண்டு.... அருகே நாம்.

என் கவிதைகளைப் புரியாதவர்களுக்கு ஓர் நற்செய்தி. அன்பர் அனகோண்டா அனந்தவரதன் அவற்றுக்கு உரை எழுதுகிறார். உரை வெளியீடு ஐப்பசி மாதம் 6ஆம் நாள்

கருங்குரங்குகள் நடமாடும் கானகத்து கருவேல மரமேறிச் செல்லும் கட்டுவிரிய நாகத்தின் வால்போல என் குற்றங்கள் அறிவதில் ரொம்ப ஸார்ப்புடீம்மா நீயி

உனக்கும் எனக்கும் இடையேயான 'அந்த' விஸயத்தை வேதியியல் என்றழைப்பதிலும் அர்த்தமுண்டு. எனுக்கு கட்ச்சி வரியும் பிரியாத சப்ஜக்ட் அத்தாம்மே

வள்ளுவன் மொழியினை வாசிக்க சகிக்கலையா 
தள்ளியே நின்றிடு வீர்

குறளிலே இன்று குறைகாணும் உம்மை
குரலிலே கொல்வேன் நாளை

காப்பியோடு உமக்குக் காப்பியமா தந்தோம்
சாப்பிட்டே படிப்பீர் குறளை

முரட்டு அப்பன், ரவுடி அண்ணன், அழகுத் தங்கை, தற்கொலை மிரட்டல் அம்மா என்போர் இல்லா உன்னோடான என் காதலுக்குக் கல்யாணந்தான் ஒரே வில்லன் போல

இன்றைய cab quota, "என் காதல் சொல்ல நேரமில்லை" - யுவன் சுருதி அசுத்தமாகக் கக்கக் கதறுகிறார். வழக்கம் மாறா ஒலிக் கூட்டல். #டேய்ய்ய்ய்ய்

அலுவலகம் முடிந்து அகம்செல்லும் வண்டியில் அரைடசன் பெண்களும் அடியேனும், அவ்வ்வ்வ்


டாவடிச்ச பொண்ணையே கட்டுங்க தம்பியளா. டவுசர் அவுராம இன்னாத்துக்குக் கண்ணாலம்? 

ஏர்செலைத் தலைமுழுகி 8 வருஷமாச்சு, ரிலையன்ஸோட ஸ்னானப்ராப்தி கூட கிடையாது. இருந்தும் 2 பயலுவளும் மாசந்தவறாம எனக்கு பில் அனுப்பறானுங்க

இந்த ரசவடை என்பதனைக் கண்டுபிடித்தவன் பெரும் ரசனைக்குரியவனாகத்தான் இருக்க வேண்டும்

//அன்புமணியின் அரசியல் செல்வாக்கைக் குலைக்க நடக்கும் முயற்சிகள் பலிக்காது - மருத்துவர் ராமதாசு// செல்வாக்கு மீனிங் யூ நோ டாக்டர்? நோ?

சிலர் சேலை அணியும்போது மாமி’யாட்டம் ஆகிவிடுகிறார்கள்; வேறுசிலர் நம் மனதை சாமி’யாட்டம் ஆடவிடுகிறார்கள் #முடியல

நான் நானாகத்தான் இருந்தேன் உன்னைப் பார்க்கும் வரை. நேற்று முதல் பட்டர் நானாகிப் போனேன். அடியே வெண்ணே!

சிம்கார்டைப் போல நீ வாயேன் உள்ளாற" என்று பெண் பாடுவதாக ஒரு கண்ணராவிப் பாடல். #எங்கடாஎன்செருப்பு?

தனிமை = கொடுமை. ராஜா இசை = இனிமை. தனிமை + ராஜா இசை = தெய்வீகம். ராஜா + தனிமை = திஹார்

Cab'ல் "கண்ணோரம் காதல் வந்தால்" பாடல் தொடங்கியதும் நண்பர் ஒலி கூட்டுகிறார். அந்தாளு வாயைத்தான் உடைக்க முடியலை; இந்தாளு கையை.... ?


"Now you can make real money online sitting at home" என மெயிலியிருக்கிறார் ஜாக்சன் என்பவர். மேனேஜருக்கு ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பிடலாமா?

ஒரு கவிதையைப் பார்த்து கவிதை எழுதும் முதல் கவிஞன் நான். #காப்பி'யம்

பல்லாவரம் HDFC பேங்க் எதிர்ல பார்த்தது. ராமசாமி மறுஜென்மம் எடுத்துதான் வரணும்போல! http://t.co/r3WEOnra

மந்திரா பேடியை மறந்தவனால தான்
அர்ச்சனாவை ஆராதிக்க முடியும்

கண்ணுங்களா! லெக்கின்ஸ் பேண்ட் போடுங்க, வேணாங்கலை. அதை ஸ்கின் கலர்ல போடாதீங்க. திடீர்ன்னு அப்டியே பதறிக்கிட்டு வருது

நாய் கடித்த நாலு-இன்ச் தழும்பையும்
வாய்பிளந்து ரசிப்பது காதல்

கிரிக்கெட் பாக்கறவன் கிறுக்கன்’னா சீரியல் பாக்கறவ சிறுக்கியா? - பக்கத்து வூட்டு ஜன்ன்னல் வழியா தெறிச்சு வந்த டயலாக்


வழுக்கைத் தலை மருத்துவரிடம் கூந்தல் தைலம் கேட்கும் பெண்ணின் அதீத நம்பிக்கையில்தான் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஒளிந்துள்ளது


மெட்ராஸ்ல வாசுதேவன்’னு ஒரு மடப்பய ஸ்கூல் நடத்தறான். அவன் ஸ்கூல்’ல LKG குழந்தை லீவ் போடணும்னா கூட பேரண்ட்ஸ் அவன் கால்ல அட்வான்ஸா விழணும்


எமர்ஜென்ஸி லீவ் போடறாப்போல ஆச்சுன்னா மறுநாள் அவன் ஆஃபீஸ் ரூம் போயி அவன் கால்ல விழுந்தாத்தான் LKG குழந்தைக்கு வகுப்புல அனுமதி


பாபு:போனவாரம் ஒரு ரகசியம் சொன்னனே, நீ யார்ட்டயும் சொன்னியா? 
கோபு: அது ரகசியமா? நீ அப்டி சொல்லலியே,அதனால யார்ட்டயும் சொல்லலை


ஆண்-பெண் நட்பு பப்பப் பாலிஷ் போட்ட ஷூ மாதிரி; உள்ள ஒளிஞ்சிருக்கற 6 மாசம் தொவைக்காத சாக்ஸ்ங்கற க்கக்கக் கா...மம் யார் கண்ணுக்கும் தெரியாது


ஒரு ஃபைலை திறக்க லெஃப்ட் க்ளிக்கை 2 முறை தட்டுதற்கு பதில் ரைட் க்ளிக்கை தட்டி 'ஓபன்' எங்கென தேடி அதை லெஃப்ட் க்ளிக்கினால் நீங்களும் ஆபீசரே


அவனுக்கே உரித்தான இடத்தை அவனே பார்க்கிறான், தள்ளி நின்று

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...