நீதிபதி தேவை என்றால் தமிழ் சினிமா தேடியோடும் ஜட்ஜ் நடிகர்களில் முக்கியமானவர் நரசிம்மன். எண்பதுகளில் டிடி தமிழ் நாடகங்களிலும் இவர் தவறாமல் தோன்றுவார்.
நிறைய படங்களில் நடித்த ஆனால் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நடிகர்கள் எக்கச்சக்கமாக தமிழ்ச்சூழலில் இருக்கின்றனர். எல்.ஐ.சி. நரசிம்மன் அவர்களுள் ஒருவர்.
நரசிம்மன் அவர்கள் அமர்க்களப்படுத்தும் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. டிவியில் எப்போது போட்டாலும் நான் ரசித்துப் பார்க்கும் நகைச்சுவை அது.
பாலிருக்கி.... பழமிருக்கி..... ஆஆஆஆஆ...
தன் நடிப்பால் நம்மை மகிழ்வித்தவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.