Jan 29, 2011

காவலன் - என்னவோ போங்க!

சில்லி சிக்கன், கொத்து பரோட்டா, கோழிக் கொழம்பு என சரமாரியாக மசாலாப் படங்களில் கொத்திக் கொண்டிருந்த விஜய் அடுத்தடுத்த படங்களின் தொடர் தோல்வியில் "எத்தைத் தின்றால் பித்தம் தீரும்" என இப்படி பம்மியிருக்க வேண்டாம். குறைந்தபட்சம் சூடாக ஒரு ரசம் சாதம் தந்திருக்கலாம் விஜய். ஆனால் இப்படி உப்பு சப்பு இல்லாமல் ரொம்ப பழைய சோறை அதுவும் நசநசவென்று தந்திருக்க வேண்டாம்.



"கெட்டது செய்யற எதிரிய கூட மன்னிப்பேன், ஆனா துரோகம் செய்யற நண்பனை குத்துவேன்" என ஒரு கத்திக் குத்துக் கொலையில் அறிமுகமாகும் ஊர்ப்பெரிய தாதா ராஜ்கிரண். 

அவர் வாயால் பூமிநாதன் எனப் பெயர் சூட்டப்படும் குழந்தையாக முதலிலும் பின்னர் வழக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டு வழக்கமான ஒரு குத்து + தத்து(வ)ப் பாடலுடன் அறிமுகம் ஆகும் விஜய்.

பழக்கமான தமிழ் க.நாயகியாக "ரோலிங்....ஸ்டார்ட்" எனும் வரை முதுகு காட்டி நின்றுவிட்டு "ஆக்சன்" என டைரக்டர் குரல் தந்ததும் ஆறடி ஒட்டுக் கூந்தலை விசிறியடித்தபடி முப்பத்தி சொச்ச பற்களையும் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அசின்.

தாதாவைக் காக்க தாதா வீடு வந்து பின் தாதா இட்ட கட்டளையின் பேரில் தாதாவின் மகளாம் அசினைக் காக்க "காவலன்" வேடமேற்கும் விஜய். தன் காட்பாதர் மற்றும் கடவுளான ராஜ்கிரண் மகள் என்பதால் படத்தின் கடைசி ஃபிரேமுக்கு முந்தின ஃபிரேம் வரை அசின் பேரில் விஜய்க்குக் காதல் இல்லை. 

ஆனால் பார்த்த முதல் பிரேமிலேயே அசினுக்கு விஜய் மேல் காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். தனக்கு வேறொரு பட்டர் கட்டருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது எனத் தெரிந்தும் வழக்கமாக நம் தமிழ்க் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களின் பேரில் வருமே அப்படிப் பட்ட ஒரு உன்னதக் காதல். (அது யாருங்க சாமி குஷ்பூ பேசினதைத் தப்புன்னும் தமிழ்க் கலாச்சாரம் இல்லைன்னு சொன்னவங்க?)



பின்னர் அலைபேசி வாயிலாக விஜய் - அசின் காதல் வளர்கிறது வளர்கிறது அப்படி ஒரு நிதானத்தில் வளர்கிறது. அசினுக்கு விஜய் விஜய்தான் எனத் தெரியும். ஆனால் விஜய்க்கு அசின் அசின்தான் எனத் தெரியாது தெரிஞ்சா காதலிக்க மாட்டாரில்ல. தமிழ்க் கதாநாயகனுக்கு குரு மரியாதை தெரியுமில்ல.

காவலன் பணியைத் துறந்துவிட்டு முன்பின் தெரியாத யாரோவென நினைத்துக் கொண்டிருக்கும் அந்தத் அலைபேசிக் காதலி அசினுடன் சென்றுவிட கிளைமாக்சில் முடிவெடுக்கிறார் விஜய். அதன் பின் ட்விஸ்ட் என்னும் பேரில் நடக்கும் அச்சுப்பிச்சுத்தன பதினைந்து நிமிட சீரியஸ்  காமெடிக்குப் பின் படம் சுபமோ சுபம் என்று முடிகிறது. ஸ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹப்பா....முடியல என்று எழுந்து வருகிறோம்.

அசின் முன்னைக்கு இப்போது கொஞ்சம் முதிர்ந்த முகம் என்றாலும் இன்னமும் அழகாகத்தான் இருக்கிறார். வடிவேலு காமெடி அப்படி ஒன்றும் எடுபட்டதாய்த் தெரியவில்லை.

மீண்டும் வித்யாசாகர் ஏமாற்றியிருக்கிறார்.  "நச் நச்" என மெலடிகளாகட்டும் குத்துகளாகட்டும், விதவிதமாய் இசைக்கோலங்கள் அமைத்த அந்த வித்யாசாகரை யாரேனும் கண்டுபிடியுங்களேன். பாடல் காட்சிப் படமாக்கல்களில் ஒளிப்பதிவு மற்றும் லொகேஷன் தேர்வு தொடர்பான பிரயத்தனங்கள் நன்றாகவே தெரிகிறது. 

விஜய் காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் என சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும் நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆன ஒரு சீனியர் நடிகருக்கு இப்படியா ஒரு அடிப்படைப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் நாம்?

விஜய் படம் மாதிரியே இல்லை சார் என்னும் மக்களின் விமர்சனம் ஒன்றுதான் படத்தை வித்யாசப்படுத்தியிருக்கிறது. மற்றபடி நான் தலைப்பில் சொன்னது போல "என்னவோ போங்க".

பி.கு: இந்தப் படத்திற்கு பட்ஜெட் முப்பத்து ஐந்து கோடி என்கிறது விக்கி.
.
.
image courtesy : 88db.com

13 comments:

Vinu said...

முன் பின் விமர்சனம் எழுதியிருக்குரீர்களா......... எல்லா இணையதளமும் காவலனை பாராட்டி விமர்சித்துள்ளது.

Vinu said...

நான் நினைகிறேன் நீங்கள் நித்திரை துக்கத்தில் அல்லது மப்பில் இருந்திருக்கலாம்

Vinu said...

விமர்சனம் எழுத தெரியும் என்றால் எழுதுங்க இல்லடி ப்ளாக் மூடுங்க

Vinu said...

எந்த கடையில சரக்கு அடித்தீங்க.......... என்னமோ போங்க.......... காவலன் பொங்கல் ரிலீஸ் இல் நல்ல படம் ஏன கூறுகிறார்கள்

நாடோடி said...
This comment has been removed by a blog administrator.
நாடோடி said...

@admin.........

wrong review

நாடோடி said...

@ vinu you are right

நர்மதன் said...
This comment has been removed by a blog administrator.
Giri Ramasubramanian said...

@ வினு, நாடோடி, சிவா

உங்கள் மூவரின் "எதிர்" வினைக்கும் "கருத்துக்" குத்தல்களுக்கும் நன்றி. இவற்றில் இருப்பதில் டீசென்ட்டான கருத்துக்களை விடுத்து மற்றவற்றை என் பிளாக்கிலிருந்து நீக்குகிறேன். தங்கள் முறையான அடையாளத்தை தாங்கள் வெளியிடும் பட்சத்தில் அந்த தரம் குறைவான பின்னூட்டங்களையும் வெளியிட நான் தயார்!

மீண்டும் நன்றி - தங்கள் வருகைக்கு. ஜெய் விஜயீ பவ! மீண்டும் வேலாயுதம் வரும்போது சந்திப்போம்!

தர்ஷன் said...

நேர்மையான விமர்சனம் நானும் ஏனைய விமர்சனங்களை நம்பி மோசம் போனேன். பன்ச் டயலாக் இல்லாத விஜய் படம் அதாவது விஜய் படம் அவ்வளவே

baln said...

vinu ...konjam adakki vaasinga ....siruthai thaan 1st ....appuram ? aadukalam nxt thaan kaavalan ..konjam urupadiyaana website la news collect panittu vaanga ...

கார்த்தி said...

காவலன் நல்ல படம்தான்! விஜயுக்கு
எதிரா எழுதோணுமுண்ணு எழுதிறீங்களா? நீங்கள் சொன்னதுபோல் வித்தியாசாகரின் பழைய specialகளை இதில் காணமுடியவில்லை.
அசினும் அசிங்கமாகதான் இருக்கிறா..

Giri Ramasubramanian said...

@Karthi

எதிரா எழுதணும்னு எல்லாம் இல்லை சார். என் கருத்து எழுதினேன். உங்கள் கருத்தை நீங்க சொல்லலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...