Mar 16, 2011

பி.பீ.ஓ'க்களின் எதிர்காலம்




அவர் ஒரு பிரபல மனிதர். வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள நம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேரில் அழைக்கச் சென்றிருந்தோம்.

புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்தவர் இன்டர்வியூக்களில் கேட்பது போல் கேட்ட முதல் கேள்வி, "பி.பீ.ஓ.'க்களோட எதிர்காலம் எப்படிங்க இருக்கு?", நான் எனக்குத் தெரிந்த பதிலைச் சொன்னேன்.

அடுத்த கேள்வி, "உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கறதுல அல்லது வெளிநாட்டுல இருந்து வேலை இங்க வர்றதுல ஒரு saturation point அப்படின்னு ஏதும் இருக்கா?". இந்த கேள்வி இதுவரை பி.பீ.ஓ. துறைக்கு வெளியே என் வட்டத்தில் யாரும் கேட்டதில்லை. தயாராக என்னிடம் இருந்த பதிலைச் சொன்னேன்.

அவர் விடவில்லை, "வெளிநாட்டுக்காரன் ஒரு தீர்மானம் போடறான் சார், அவுட்சோர்சிங்'ல வேலை கொடுக்கக்கூடாது அப்படின்னு. அப்போ உங்க எதிர்காலம் பத்தி என்ன சொல்லுவீங்க?". அட.... இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது. அதையும் சொன்னேன்.

 இவை நேரிடையான தகவல் அறியும் பொருட்டு கேட்கப்படும் கேள்விகள். இது போன்ற கேள்விகள் நம்மை பயமுறுத்தாது. நான் சொன்ன  பதில்களனைத்தும் இந்த நான்கரை ஆண்டுகளில் இந்த பி.பீ.ஓ. உலகத்தில் நான் கற்றவைகள் வாயிலாகச் சொன்னவை.

இவை தவிர்த்து,  "என்ன சார், ஒபாமா உங்களுக்கு வேலை தரமாட்டாராமே?",  என்பதான கேள்விகள். "ஜெர்மனில புதுசா அவுட்சோர்சிங்'ற்கு  எதிரா பில் பாஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா சார்? இனிமே அங்க இருந்து பிசினஸ் வராது", இது போன்ற சுய தீர்மான தகவல்கள்.

இவ்வகைக் கேள்விகள் / அரைகுறைத் தகவல்கள் இந்தத் துறையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருக்கும் இருப்பதே. சரியான தகவலை அல்லது பதிலை, சரியான நபர்கள், சரியான இடத்தில் பகிர்ந்து கொள்ளாததே இங்கே பிரச்னை. வணிக நாளிதழ்களைப் புரட்டி இந்தத் துறையின் போக்கு குறித்து சரிவர புரிந்து கொள்ளும் ஆர்வமும் இங்கே பலருக்கு இல்லை. கேள்விகளை எழுப்பிவிட்டோ அல்லது தகவல்களை அள்ளித் தெளித்துவிட்டோ போய்க்கொண்டே இருக்கவேண்டும். 

இவர்களுக்காக கார்பரேட் கனவுகள் புத்தகத்தில் நான் எழுதின அத்தியாயம்தான் "ஒபாமா மசோதாக்கள்". இந்த அத்தியாயத்தில் அமெரிக்க தேர்தல் நேரத்தில் ஒபாமா தந்த வாக்குறுதிகளைக் குறித்தும் ஆட்சிக்கு வந்தபின் எந்த விதத்தில் அவர் அவுட்சோர்சிங் துறை மீது கை வைத்தார் என்பது குறித்தும் எழுதியிருக்கிறேன். 

அவர்கள் வேலையை இங்கே கைமாற்றிவிட செய்யும் அடங்கள் எதற்காக? இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் அரசியல், ஒபாமா வருகைக்குப் பின் இந்தத் துறையின் போக்கு இவை குறித்து விவாதிக்கிறது இந்த அத்தியாயம்.

மேலும்.....         

.....மேலும் தகவல்கள் புத்தகத்தில்....!

வரும் சனிக்கிழமையன்று சென்னையில் கார்பரேட் கனவுகள் புத்தக வெளியீட்டு விழா. அங்கு சந்திப்போம் நண்பர்களே!
.
.
.

3 comments:

Anonymous said...

CTS சென்ற ஆண்டு கிடைத்த மிகப்பெரிய லாபத்தை அனைத்து ஊழியர்களுக்கும் பகிர்ந்து அளித்துள்ளது. நேற்று பேப்பரில் படித்தேன். 200% போனஸ் தொகை பெறப்போகிறார்கள். இது போல் அனைத்து பெரிய நிறுவனங்களும் செயல்பட ஏன் தயக்கம் என்று தெரியவில்லை. சுமாரான லாபத்தில் சென்றால் கூட பல வசதிகளை ஊழியர்களிடம் இருந்து பறித்து கொள்கின்றனர்.

Giri Ramasubramanian said...

@ சிவகுமார்
சில நேரங்களில் அதீதமான ஆட்டமும் ஆபத்தே. இந்தத் துறை கடந்த ஆண்டு சந்தித்த பின்னடைவே அதற்கு சாட்சி. வேலையிருக்கு வேலையிருக்கு என அளவுக்கு அதிகமாக ஆட்களைச் சேர்த்துக் கொண்டதும், கொண்டாட்டம் குதூகலம் என பணத்தை வாரியிறைத்துச் செலவு செய்ததும் பல சோட்டா நிறுவனங்களை மூழ்கடித்தது. அவை ஒரு க்ரைசிஸ் சிட்சுவேஷனில் முழி பிதுக்கி நின்றன. எந்த விஷயத்தைக் கையாள்வதிலும் மிதமான போக்கு உங்களை நன்மையில் கொண்டு சேர்க்கும். சில நிறுவனங்கள் போனஸ் தொகையை உயர்த்தித் தருவதும், சம்பள சலுகைகளை இப்போது திடீர் என்று அள்ளித் தெளிப்பதும் மீண்டும் இந்தத் துறை மற்றுமொரு விஸ்வரூபம் எடுப்பதை கோடி காட்டுகிறது. இருந்தாலும் பலூனை ஓவராக ஊதுதல் யாருக்கும் நல்லதில்லை!

ம.தி.சுதா said...

சந்தர்ப்பம் அமையும் போது அதை தழுவ காத்திருக்கிறேன் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...