Dec 24, 2011

பாடுகிறேன் 10000



குர்கானிலிருந்து செந்தில் பேசினான். நம் பாடுகிறேன் தளத்தில் ஒரு சில பாடல்கள் பாதியில் தொங்கிக் கொண்டு நிற்பதாகவும் அவற்றைக் கேட்க முடியாமல் போய்விடுவதாகவும் சொன்னான். பொதுவாக மக்கள் என்னமோ பண்ணுகிறானே ஏதோ திறந்து பார்ப்போம் என்றுதான் நம் தளத்திற்கு வருகிறார்கள் என நினைத்திருக்க....

“கொஞ்சம் என்னன்னு பாருங்க கிரி. எங்களால பாட்டு கேக்க முடியலை பாருங்க”, என்றான்

“அடடே! இதுக்கெல்லாம் கூட ஃபோன் பண்ணுவீங்களாய்யா? ரொம்ப நன்றியப்பா. சைட்ல என்ன பிரச்னைன்னு தெரியலை, இருந்தாலும் பாக்கறேன்”, என்றேன்.

“என்ன இப்பிடி சொல்லிட்டீங்க! டெய்லி காலைல எழுந்தவுடனே உங்க பாடுகிறேன் சைட்தான் மொதல்ல ஓபன் பண்ணுவேன்”

“ஆஹா தேங்க்ஸ்பா”

“நான் மட்டுமில்லை, எங்க ரூம்ல என்கூட இருக்கற ஆறுபேரும் காலைல எழுந்ததும் உங்க பாட்டோடதான் நாளைத் துவங்குவோம்”

“அடடே! அடடே! கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கய்யா! 

“பின்ன! உங்க பாட்டைக் கேட்டாத்தான் எங்க ஒவ்வொருத்தருக்கும் காலைச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து போவுது”, என்றான்.

“டேஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்”, என்று ஃபோனை சாத்தினேன்.



எது எப்படியோ! நம் தளம் இப்படிப்பட்ட ரசிகர்களின் தொடர் ஆதரவினால் இன்று பத்தாயிரமாவது ஹிட்டை எட்டிப் பார்த்தது.

இந்த 365 நாள் ப்ராஜக்ட்’டைத் தொடங்க இன்ஸ்பிரேஷனாக இருந்த சொக்கனுக்கும் டாக்டர்.விஜய் அவர்களுக்கும் என் முதல் நன்றி. தொடர்ந்து பாடல்களைக் கேட்கும், ஊக்கம் தரும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். பின்னூட்டங்கள் வாயிலாகவும், ட்விட்டர் மூலமாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.

2 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Related Posts Plugin for WordPress, Blogger...