Feb 28, 2012

சைதை பொறை நிலையம்

வணக்கம், 



உங்களிடம் ஒரு தகவல் உதவி வேண்டும் .. உங்கள் கட்டுரையில் ஒருமுறை நீங்கள் கூறி இருந்திர்கள் சைதாப்பேட்டை பொறை ரொட்டி பற்றி. நான் தாய்லாந்தில் இருக்கிறேன் இங்கே அது எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை அதற்கு பெயர் சரியாக எனக்கு தெரியவில்லை. மேலதிக தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் .

முருகன், தாய்லாந்து



டியர் முருகன்,

பொறை ரொட்டி உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.  சென்னை மக்கள் 90 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த பொறை ரொட்டிதான் காரணம்.  இந்த பொறை ரொட்டி முக்கிஎடுத்த காப்பியைத்தான் நான் ஏழெட்டு ஆண்டுகளாக அருந்தி வருகிறேன் (ஏழெட்டு வருடமாய் இன்னமும் அந்தக் காப்பி தீர்ந்தபாடில்லை).  பால் கலக்காத காப்பி.  பொறை ரொட்டி'தான் என் ஃபேசியல் க்ரீமும் கூட. என் ‘வதன அழகு’க்கும் இதுவே காரணம்.  பொறை ரொட்டி பேஸ்ட் வெறும் பேஸ்ட் மட்டும் அல்ல; அது ஒரு பலரோக நிவாரணி.  வயிற்று வலி வந்தால் இந்தப் பேஸ்ட் கொஞ்சம் தின்றால் வயிறு தன்னால் சர்வ சத்தங்களுடன் க்ளியராகப் போய்விடும்.  தீக்காயம், ரத்தக் காயம் போன்றவற்றில் போட்டால் காயம் மாயமாகி விடும்.  அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், பொறையும் கொஞ்ச நேரத்தில் மாயமாகிவிடும்.



விலாசம்: தக்ஷிணா இண்டஸ்ட்ரீஸ், 6, விவேகானந்தர் தெரு, பாங்காக்   பஸ் நிலையம்,  பாங்காக், தாய்லாந்து.

சென்னையில் கிடைக்குமிடம்: சைதை பொறை நிலையம், 6, விவேகானந்தர் தெரு, சைதை பஸ் நிலையம், சைதாப்பேட்டை, சென்னை - 15.

E Mail: saidhaiporai@saidhaiporai.com

5 comments:

கானா பிரபா said...

இந்தக் காத்திரமான இலக்கியத்துக்கு ஒரு புன்னூட்டம் கூடக் கிடையாதா, இந்தாரும் வச்சிரும்

Giri Ramasubramanian said...

அடடே! அடடடடே!

தன்யனானேன்!

நவின் குமார் said...

அப்படியே அர்க் பத்தியும் ஏதேனும் எழுதினால் நலம் பலம் பயக்கும்

Giri Ramasubramanian said...

@ நவீன்

இதானே வேணாங்கறது!

திண்டுக்கல் தனபாலன் said...

ஓ ! அப்படியா !

Related Posts Plugin for WordPress, Blogger...