Apr 21, 2010

மன / மதமாற்றம் ௦௦- எதிர்வினை


மிக அபத்தமான ஒப்பீடு செய்துள்ளீர் நண்பரே..
நித்யானந்தா ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தான் மட்டும் கபடத்தனமாக செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டவர் மட்டுமல்லாமல் இன்னமும் தான் தவறே செய்யாத யோக்கியர் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆனால் பெரியார்தாசனோ கடந்த காலங்களில் தான் கூறிய நாத்திகக் கருத்துக்கள் தவறானவை என பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு அதற்காக மன்னிப்பும் கேட்டவர். அவர் ஊருக்கு நாத்திகம் போதித்து தான் மட்டும் ரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தால் ஊடகங்கள் கண்டிப்பாக அவரை ஒரு வழியாக்கியிருக்கும். கொஞ்சம் சிந்தித்து கருத்தை பதிவிடுங்கள் நண்பரே.!




தமிழ் மீரான் அவர்களுக்கு,

உங்கள் கருத்திற்கு நன்றி, அது எனக்கு ஏற்புடையது இல்லை எனினும்.

பேராசிரியரின் பேச்சு வெளியிடப்பட்ட இந்தப் பதிவைப் படியுங்கள். இந்திய மரபும் பார்ப்பன திரிபும். இது ஒரு பானை சோற்றின் ஒரே ஒரு சோற்றுப்பதம்இது போன்றதொரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் பற்றித்தான் நான் விமரிசித்திருக்கிறேன். நிலையற்ற தன்மையின் ஒட்டு மொத்த உருவமாயிருக்கும் அவர் பற்றித்தான் என் கருத்தே ஒழிய அவர் சார்ந்த எந்த இனத்தையும் பற்றியதல்ல என்பதை தெளிவாய்ப் புரிந்து கொள்ளுங்கள். 

கடவுள் மறுப்பு தவறானதல்ல. அது அவரவர் கொள்ளும் தனி மனிதக்கொள்கை.  கடவுள் இல்லை என நாத்திகம் பேசுதற்கும், இது போல கீழ்த்தரமான பொதுப் பேச்சுக்களில் ஈடுபடுதலுக்கும் வித்தியாசம் நிச்சயம் உள்ளது என்பது நீங்களும் ஒப்புக்கொள்ளும் விஷயம்தான்.

எது வேண்டுமானாலும் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது சரியென்றால், நித்தி அவர்கள் எந்நிலையிலும் ஒரு மன்னிப்பைக் கேட்டார் என்றால் அவர் செய்த அத்துணையும் சரியாகிவிடும் அல்லவா? மேலும், நான் நித்தியானந்தா செய்ததை எந்நிலையிலும் சரி எனக் கூறவில்லை. ஆனால் அவர் அந்தரங்கம் அறியும் அரிப்பைக் கொண்டிருக்கும் நம் எல்லோர் மன நிலையையே சாடியிருக்கிறேன். ஊடகங்கள் நித்தி அவர்களை கூவிக்கூவி விற்றதும், பேராசியரைக் கண்டும் காணாது  இருந்ததற்கும் காரணம், உலகமெங்கும் மனிதச் சந்தை ஒரே போல இருக்கிறது. SEX SELLS, அவ்வளவுதான்.

அன்புடன்,
கிரி

3 comments:

தமிழ் மீரான் said...

தங்கள் பொருப்புமிக்க பதிலுரைக்கு நன்றி. உலகெங்கும் பாலியல் தொடர்பான விஷயங்களில் மக்களுக்கு அதீத ஆர்வம் இருப்பது உண்மைதான். இதே நித்யானந்தா பாலியல் அல்லாத சர்ச்சைகளில் மாட்டியிருந்தால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்க மாட்டார் என்பது முற்றிலும் சரியே.

Giri Ramasubramanian said...

புரிந்து கொள்தல் மிகவும் அரிதாய் இருக்கும் இந்த இணைய உலகில், ஒரே பதிலில் குளிர்ந்த பதில் தந்த நண்பர் தமிழ் மீரானுக்கு,

நன்றி!

Anonymous said...

பெரியார் தாசனை விமர்சிக்க உங்களைப் போன்ற சொறி நக்கி பாப்பார நாய்க்கு என்ன அருகதை உள்ளது?

Related Posts Plugin for WordPress, Blogger...