May 9, 2011

1166/1200



சென்ற வருடம் +2  ரிசல்ட் வந்த வேளையில் என் கசின் ஒருத்தி 1200 'க்கு 1166 எடுத்திருந்தாள். +2'வில் அறுபத்து சொச்ச சதவீத  மதிப்பெண்கள் எடுத்த என் போன்றவர்களுக்கு அது சூப்பர் டூப்பர் மார்க்தான். அவளை வாழ்த்த தொலைபேசியை எடுத்தேன். எதிர்முனையில் கேட்ட அவள் குரலில் ஒரு சுரத்தே இல்லை. 

ம்ம்ம்... சொல்லுங்க

ஹேய்.... வாழ்த்துக்கள்.

ஆ.... தேங்க்ஸ்!

என்ன இப்பிடி டல் அடிக்கற? யு காட் நைண்டி செவன் பர்சன்ட் மார்க்.

எஸ்..... ஆமாமாம்...!

ஹல்லோ. வாட்ஸ் ராங் வித் யு?

நத்திங். அயம் ஆல்ரைட். இருங்க அம்மா கிட்ட தர்றேன்.

ஹல்லோ. சாதனையாளரின் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

ஆ.ஆ... தேங்க்ஸ் பா  ....

என்னாச்சு உங்களுக்கு ஒரு சாதனையாளர் தாயார் மாதிரி பேசுங்க.

என்ன பெரிய சாதனை பண்ணிட்டா? கம்மியாத்தானே மார்க் எடுத்திருக்கா? ஸ்கூல் ஃபர்ஸ்ட் கூட வரலையே. இவளோட படிச்ச பொண்ணுங்கல்லாம் 1180 க்ராஸ் பண்ணியிருக்காங்க தெரியுமா?

ச்சே... இதுதான் விஷயமா?

எங்கள் குடும்பத்தில் எங்கள் பாட்டன், பூட்டன், அப்பா, அப்பத்தா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்சினி என்று யாரும் இப்படி மதிப்பெண்கள் எடுத்ததில்லை. இருந்தும் 97%'ற்கு மகிழ்ச்சியில்லை நமக்கு. இதற்கு யாரை நோவது?

எ.கொ.ச. என நினைத்துக் கொண்டு போனைச் சாத்தினேன்.
.
.

5 comments:

natbas said...

இளைய சமுதாயத்தை நினைச்சா பாவமா இருக்கு :(

Unknown said...

மதிப்பெண் முறை எதற்கு ஏற்படுத்தப்பட்டதோ அந்த காரணம் காலாவதியாகிவிட்டது.தற்பொழுதைய தேர்வு முறையால் மாணவ சமுதாயத்திற்க்கு வரும் நன்மைகளை விட தீமையே அதிகம்

வீராங்கன் said...

என்ன கொடும சரவணா?

வீராங்கன் said...

மாணவர்கள் 1200 எடுத்தாலும் 1100 எடுத்தாலும் அவர்கள் லட்சியமான டாக்டர் சீட் அல்லது எஞ்சினியர் சீட் அல்லது ஏதோ ஒன்று எடுப்பது மட்டுமே இந்த மதிப்பெண்ணால் சாத்தியம். அடுத்த கட்டத்தில் கோட்டை விட்டால் அவ்வளவுதான்.

இந்த ஆட்டத்தில்(தேர்வில்தான்) கோட்டைவிட்டாலும் அடுத்தடுத்த தேர்வுகளில் அல்லது காலங்களில் வெற்றி பெற்றால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அல்லது தொழிலதிபர் அல்லது பிரதமர் கூட ஆகலாம்.

வீராங்கன் said...

//என்ன பெரிய சாதனை பண்ணிட்டா? கம்மியாத்தானே மார்க் எடுத்திருக்கா?//


லூசாம்மா நீங்க....,

Related Posts Plugin for WordPress, Blogger...