Sep 8, 2011

பெண் ஏன் அடிமையானாள்?


நேற்று அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சினூடே அவரவர் வீட்டு வம்புதும்புப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் என்னென்ன வேலைகள் யார்யார் பகிர்ந்து செய்வார்கள் என்ற பேச்சும் வந்தது.

நம் வீட்டில் எல்லாமே ஷேரிங் பேசிஸ்தான். அதிலும் ”இந்த வேலை நீ செய்! அந்த வேலை நான் செய்வேன்!” என்னும் பாகுபாடுகள் எல்லாம் இல்லை. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல் இருக்கின்ற வேலையை யாரேனும் ஒருவர் செய்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பது நம் வீட்டு இஸ்டைல்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி துணுக்குற்றார்போல் ஆகிவிட்டார். ”என்னது, வீட்டு வேலையெல்லாம் உங்களை செய்ய சொல்லுவாங்களா உங்க வைஃப்? அவங்கதான் வேலைக்குப் போகலியே, அப்போ என்னதான் செய்வாங்க?”, கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர் அவர். தனிக்குடித்தனத்தில் அதிலும் ஒண்ணரை வயசுக் குழந்தையுடன் இருக்கும் குடும்பத்தில் வேலைகளைப் பகிர்ந்து பண்ணும் அவசியத்தை அவருக்குச் சொன்னேன். இருந்தும் அவருக்குச் சமாதானம் இல்லை.

“அது எப்படிங்க வீட்டை க்ளீன் பண்ற வேலையெல்லாம் ஆம்பளைங்க கிட்ட குடுக்கறாங்க, தட்ஸ் நாட் ஃபேர்”, என்றார்.

“அதுல என்ன இருக்குங்க? சும்மா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ற நேரத்தை வீட்டு வேலைல செலவு செய்தா என்ன?”

“அய்யய்ய.... நாங்கல்லாம் எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு அந்த வேலையெல்லாம் தரமாட்டோம்”

“அப்போ உங்க வீட்டு ஆம்பளைங்க என்ன வேலைதான் செய்வாங்க”

“கடைவீதிக்கெல்லாம் எப்பயாவது போவாங்க. ஆனா நாங்க அவங்களுக்கு வீட்டு வேலையெல்லாம் வைக்க மாட்டோம்”

”இந்த காய்கறி நறுக்கித் தர்றது”

”சேச்சே...”

”காபி போடறது”

“அதுக்குத்தான் ஒருத்தருக்கு மூணு லேடீஸ் இருக்கோமே வீட்ல”

”ஆம்பளைங்களும் உங்க வீட்ல ரெண்டு பேரு இருக்காங்கதானே?”

”இருந்தாலும் அந்த சில்லறை வேலை அவங்களுக்கு ஏன்”

"கொஞ்சம் வீட்டுவேலை அப்பப்போ பார்த்தா உடம்புக்கு பிபீ, சுகர் வராதுன்னு சொல்லுவாங்க”

“அதுக்குதான் அறுவதாயிரம் குடுத்து வாக்கிங் மெஷின் (!!) வாங்கியிருக்கோமே (அடப்பாவிகளா!)”

“வாஷிங் மெஷின் போடறது?”

“வாஷிங் மெஷின் போடன்னு தனியா வேலைக்கு ஆள் இருக்கு (கொடுமைடா)”

“அவங்க சாப்பிட்ட தட்டையாவது கழுவி வைப்பாங்களா?”

“என்னது? அந்த வேலைகூட உங்க வீட்டம்மா பண்ணமாட்டாங்களா?”

இப்போது நான் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அடடா.... நம் வீட்டில்தான் நமக்கு அநீதி நிகழ்கிறதா? ஒருவேளை ஆண் ஏன் அடிமையானான் என்று இக்கட்டுரைத் தலைப்பை மாற்றவேண்டுமோ?
.
.
.

3 comments:

துளசி கோபால் said...

அப்படியெல்லாம் தவறான தலைப்பு வச்சுடாதீங்க:-))))))

நம்ம வீட்டில் எல்லா வேலையையும் பகிர்ந்துக்குவோம். ஆனால் அதுலே தனித்தனி பிரிவு இருக்கு!

துணி நான் துவைச்சு வைப்பேன் மெஷீன் போட்டு! அவர் அதையெல்லாம் பொட்டி போட்டு வைக்கணும்.

பாத்திரம் நான் தேய்ப்பேன் டிஷ் வாஷரில் போட்டு. அவர் வீட்டை வேக்குவம் க்ளீனரில் பெருக்குவார்.

இப்படியே ஏகப்பட்ட டிவிஷன்ஸ்:-)))))

Giri Ramasubramanian said...

@ துளசியம்மா

ஒலகம் உருண்டை, எல்லாருக்கும். இப்போ புரிஞ்சுது!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
உங்களுக்கு மின்னஞ்சலில் சில செய்திகளை எழுதுகிறேன். உங்களுக்கு மட்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...