Sep 21, 2011

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்


ஈமெயிலில் கிடைத்த டிப்ஸ்! உங்களுக்குப் பயனளிக்குமா பாருங்கள்!

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ‘ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ‘ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார்’ என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.

முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே… என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் ‘நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க’ என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

இதெல்லாம் செய்தும் புரமோஷன் வராமல் போனால்... இந்த டிப்ஸ்'கள் உங்கள் பாஸ்'சுக்கு முன்னமே ஃபார்வர்ட் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

6 comments:

Mohamed Faaique said...

எங்க பாஸ்?? இப்போ இதெல்லாம் எல்லோருமே பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. எங்க பாஸே அவர் பாஸ் கிட்ட இதே பில்ட் அப்`தான் குடுக்குராரு`னா பாத்துக்கங்களே!!!

கிரி ராமசுப்ரமணியன் said...

@ Mohamed Faaique

ஹஹஹா.... கொடுமை சார்!

IlayaDhasan said...

//ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி,
//மலையாளம் கலந்து பேசுவது
//குணச்சித்திரத்தை மேம்படுத்தும்.

ரொம்ப அட்டி பட்டுறகீங்க போல இவனுங்க நால!

காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு

சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

IlayaDhasan said...

நல்ல அட்வைசு , முயற்சி பண்ணனும்.

காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு

முதல்வர் என்னை சந்திக்க விரும்பினார் - சோனா

Kannan said...

உங்கள் தகவலுக்கு நன்றி.....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Rathnavel said...

அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...