Oct 28, 2011

ஏழாம் அறிவு


இந்தப் படம் வெளியான இரண்டு நாட்களுக்குள்ளாகவே தமிழ்கூறும் இணையவுலகம் படத்தைப் பிரித்துக் க்ண்டமேனிக்கு மேய்ந்துவிட்டிருக்கிறது. ஓக்கே என் பங்கிற்கு நானும்....

கொஞ்சம் அங்கங்கே கடன் வாங்கி ஸ்டோரி டிஸ்கஷனில் நன்றாய் டிங்கரிங் செய்து நல்ல பூச்செல்லாம் பூசின ஒரு கதை. சைனா இந்தியாவை உயிரியல் போரில் (bio-war?) அழிக்கப் பார்க்கிறது. 1600 ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டு ஒரு தமிழேனும் தமிழேச்சியும் அதை முறியடிக்கிறார்கள். கதை அத்ரயே! 

திரைக்கதை புதுசாய் ஏதுமில்லை என்றாலும் தொய்வில்லாமல் பார்க்க வைக்குமளவிற்கு இருக்கிறது. எந்த இடத்திலும் நிற்காமல், இழுக்காமல் படம் நகர்ந்து கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.

ஆரம்ப பதினைந்து நிமிடங்களின் போதிதர்மர் வரலாறு பகரும் ஆவணப்படத்தனமான துவக்கம் சூப்பர். அங்கே நிறையவே மெனக்கெடல் தெரிகிறது. அந்தப் பின்னணிக் குரலின் narration'ல் சற்றே இயல்பைச் சேர்த்திருக்கலாம்.

படத்தின் பெரிய ப்ள்ஸ் சூர்யா. வழக்கம்போல் பார்வையிலேயே படம் முழுசும் அழகாய்ப் பேசுகிறார். போதிதர்மர் ரோலில் முகபாவம் தொடங்கி ஸ்டண்ட் வரை அத்தனையும் கனகச்சிதமாக பண்ணியதற்கு சூர்யாவுக்கு பாராட்டுகள். க்ளைமாக்ஸில் சூர்யா (ஃப்ரெண்ட்ஸ் விஜய் பாணியில்) தடாலென எழுந்து அடிப்பதெல்லாம் நல்ல ஜோக். இருந்தாலும் அங்கே ஸ்டண்ட் அனல் பறக்கிறது. ஆரம்ப ரொமான்ஸ் காட்சிகளில் தன் தம்பி கார்த்தியின் சாயலில் நடித்திருப்பது ஏனோ?

ஸ்ருதிஹாஸன் நடிப்பெல்லாம் ஓக்கே, முதற்படம் பொறுத்தருள்வோம். தமிழ்தான்.... தமிழ்தான் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொல்கிறார். 

என்ன நிர்ப்பந்தமோ.... ஸ்ருதிஹாஸனும் சூர்யாவும் காதுகள் புளிக்கப் புளிக்க நிறைய நிறைய தமிழன் பெருமை பேசுகிறார்கள். வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்யாசம் தெரிஞ்சிக்கோ என்னும் இடைச்செருகல் ஆவேசங்கள் படத்திற்கு ஏன் எனப் புரியவில்லை.

வில்லன் டெர்மினேட்டர் - 2 வில்லன் பாணிய்ல் கிய்யா-மிய்யா என இந்தப்பக்கம் அந்தப்பக்கம் தலை சாய்த்துச் சாய்த்து சைனீஸ் பரதநாட்டிய நடை நடக்கிறார். நல்லவேளையாக அவருக்கு வசனங்கள் குறைவு.

இசை ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு மேல் ஏதும் சொல்லவேண்டுமா என்ன? யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடலுக்குத் தனியேதான் ஒரு பதிவு வரைய வேண்டும். :)

மீடியா ஹைப் அளவிற்கு சூப்பரோ சூப்பரும் இல்லை. இணையவாசிகள் துவைக்கும் அளவிற்கு குறைவாகவும் இல்லை. ஏழாம் அறிவு - பார்க்கலாம் ரக சினிமா.

6 comments:

சண்முகம் said...

நடுநிலையான விமர்சனம் வாழ்த்துக்கள்....

தர்ஷன் said...

பாஸ் ஃபர்ஸ்ட்டு டே ஃபர்ஸ்ட்டு ஷோ போய் டிக்கெட் கிடைக்காம, அடுத்த ஷோவும் அடிதடி பட்டு சின்னதம்பி படம் பார்க்கப் போன சூப்பர் ஸ்டார் மாதிரி வியர்வையில குளிச்சு உள்ள போனேன். அப்ப படத்த பார்த்தோன எவ்வளவு காண்டாகி இருப்பேன்னு யோசிச்சுகுங்க
என்னா ஹைப் கொடுத்தானுங்க
திமிரு வரும், ஹொலிவுட் காரன் காப்பி பண்ணுவான்,சூர்யாவே இப்படி ஒரு படம் இனி பண்ண முடியாது அப்படி இப்படின்னு

கிரி ராமசுப்ரமணியன் said...

@ சண்முகம்

மிக்க நன்றி

@ தர்ஷன்

ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கீங்க போலிருக்கு :)

Pulavar Tharumi said...

உங்களுக்கே உரிய தனி பாணியில் நல்ல விமர்சனம் :)

வேதாளம் said...

நேர்மைன்னா என்னம்மா?

நம்ம கிரி அண்ணாத்த தாண்டா கண்ணு..

#நடுநிலை விமர்சனம்...

கிரி ராமசுப்ரமணியன் said...

@வேதாளம்

#முடியலை

Related Posts Plugin for WordPress, Blogger...