Feb 23, 2013

விஷரூப விமர்சக அண்ணேய்ய்ய்ய்ய்
//ஏதாவது ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம், நம் தாக்குதலில் நூறு ஆப்கானியர்கள் இறந்துவிட்டார்கள் என்று சொன்னதும் வெறும் நூறுதானா என்று எகத்தாளமாகக் கேட்பதையும் காட்டியிருக்கவேண்டும்.

ஒவ்வொருமுறை குண்டு வீசிவிட்டு பாவ மன்னிப்பு கேட்பதில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பாவம் செய்வதற்கு முன்பாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்ள வழியுண்டா… அப்படி இருந்தால் இன்னும் உற்சாகத்தோடு தாக்க ஏதுவாக இருக்கும் என்று பாதிரியாருடன் ஒயின் அருந்தியபடியே ஒரு அமெரிக்க ராணுவ ஜெனரல் சிரித்துப் பேசி மகிழ்வதாக ஒரு காட்சி எடுத்திருக்கவேண்டும்.//

என்னா சார் ரொம்ப ஷாட்டா கமலுக்குப் படம் எடுக்க சொல்லிட்டீங்! ஐம்பது வருஷ சினிமா அனுபவம் மிக்கவருக்கு ஏத்தாப்ல நீங்க வழக்கமா நெம்ப நீளமா பக்கம் பக்கமா படமெடுக்க சொல்லித் தருவீயளே?

வீ ஆர் அப்செட் யூ நோ? தர்ரோலி டிஸபாய்ய்ண்ட்டட் மிசுட்டர்! டோண்ட் டூ திஸ் மிஸ்டேக் அகைன் ஓகே? வீ நீட் மோர் எண்டர்டெயின்மெண்ட். மனுசனுக்கு ஒடம்பு பூரா சொறிஞ்சி சொறிஞ்சி ஆயின்மெண்ட் பூசற அளவுக்கு உங்கள வுட்டா யாரு எண்டர்டெயின்மெண்ட் தர்றாங்க சொல்லுங்க?

// இஸ்லாமியர்களிடத்திலும் அல்கொய்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இருந்திருப்பார்களே. அதையும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா…//

ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கமல் கேரக்டரே ஒரு முஸ்லிம் கேரக்டர்தான்யா. படத்தை பிச்சுப் பிச்சு கொறை கண்டறிய மட்டும் பாப்பீரா? 

//கமல்ஜி ஒரு இந்திய ராணுவ/உளவு வீரர். அல்கொய்தாவுக்கு ஆயுதப் பயிற்சி தரும் போர்வையில் நிஜாம் அகமது காஷ்மீரி//

தம்ப்ரீ..... அது விஸாம் அஹ்மத் கஷ்மீரி.....   ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர். 

//அந்த பாகிஸ்தானியை அடித்து கொல்வார்கள்//

அண்ணை.... உண்மையச் சொல்லுங்கோ.... படம் பாத்தீரா. இல்லை வஹாபு பார்ட்டி மாதிரி அட்ச்சி வுட்ற விமர்சனமா அது? தியேட்டர் காப்பி டிவிடி பிரிண்ட் சரியில்லியா? என்னண்ணே, என்னண்ட சொல்லிருந்தா ப்ரீவ்யூவுக்கே கூட்டிட்டுப் போயிருப்பனே. 

அது அராபியர் ஓய். அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அம்பத்தி சொச்ச நூறு மைல் டிஸ்டன்ஸ் உண்டு.

// (இப்போது அவருக்குப் பெயர் விஸ்வம்)//

தெளிவு. அட்ச்சி வுட்ட விமர்சனம் இது. விஸ் என்று அழைக்கப்படும் விஸ்வநாத், அது எப்பிடிய்யா விஸ்வம் ஆகும்? மாகாதேவன்னு உம்பேரு, அதை மகராஜன்னு சொன்னா பொறுப்பீரா?  (இந்தாளு என்னை மாமல்லன் ஆக்காம வுடமாட்டாரு போல) 


//சுமார் ஒன்றிலிருந்து இரண்டு அடி மட்டுமே உயரம் (ஆழம்) கொண்ட மைக்ரோவேவ் ஓவனை எடுத்துவந்து சுமார் மூன்று அடிக்கு மேல் உயரமாக இருக்கும் அந்த வெடிகுண்டுக்கு மேலாக ஃபாரடே ஷீல்டுபோல் கவிழ்க்கிறார்.//

குக்கர் ஒண்ணரை அடி இருந்தா, ப்ரெஷரை அரெஸ்ட் பண்ற வெயிட்’டும் ஒண்ணரை அடி இருக்கணுமா அண்ணை? ஓ நிம்பள் வீட்டு ப்ரெஷர் குக்கருக்கு வெயிட் (விசில்) அஞ்சு அடி இருக்கும் போல.

//இந்து – முஸ்லீம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் இந்தியனாக ஒருவர் செய்ய வேண்டியது என்ற தெளிவு இருக்கவேண்டாமா? இத்தனைக்கும் நமக்கு மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது.  பிரிட்டிஷார் நம் நாட்டை அடிமைப்படுத்தியபோது இந்துக்களும் முஸ்லீம்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்று போராடியிருக்கிறார்கள். அதுபற்றி ஒரு படம் கூட நம்மால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.......

......வலிமை மிகுந்த ஒரு எதிரியை எளிய மக்கள் கூட்டம் எதிர்க்கும் போது பின்பற்ற வேண்டிய ஆக்கபூர்வமான போராட்டமுறை எது என உலகுக்கே கற்றுத் தந்தவர்கள் நாம். ஆனால், அதைப் பற்றி ஒரு படம்கூட நம்மால் இதுவரை உருப்படியாக எடுக்கப்பட்டிருக்கவில்லை. நம்முடைய கலையை, வரலாற்றைப் பதிவு செய்வதை விட்டுவிட்டு //

நீங்க வளக்கமா ஒரு கொடூர திரைக்கதை வரைவீங்களே, அதே இஸ்டைல்ல இன்னொண்ணு வரஞ்சி குடுங்க சார். கமல் சாருக்கு நான் ரெகமெண்ட் பண்ணி, ஆனது ஆவட்டும் எத்தனை கோடி செலவானாலும் எடுத்துப்புடுவம்.

//இன்றைய நிலையில் ஓர் இந்தியக் கலைஞன்  செய்ய வேண்டிய காரியம்//

எப்ப ஓய் நீர் கமலை கலைஞன்னு ஒப்புத்துக்கிட்டீர்? ஏன் ஓய் இந்தத் தடுமாத்தம்? உம்ம ரூட்லருந்து கீழ எறங்கி அடையாளம் தொலைக்காதீர் ஓய். இப்போ கலைஞன்’னு சொல்வீர், அடுத்து எதான பாராட்டுவீர், பெறகு ரசிகர் ஆவீர். வேணாம் ஓய்..... எங்களுக்குன்னு கெடைச்ச ஒரே பவர்ஸ்டார் ரெவியூவர் நீர்தான். உம்மையும் நாங்க எழக்கத் தயாரில்லை.

//கமல் படம் எடுக்கக் கற்றுக் கொண்டுவிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நல்ல படம் எடுக்க எப்போது கற்றுக் கொள்வார்?//

பார்றா.... நான் சொல்லல்லை.... விஸ்வரூப ட்ரான்ஸ்ஃபார்மேஷன் எஃபெக்டு நம்ம அண்ணைக்கும் ஒட்டிக்கிச்சி. ப்ளீஸ் அண்ணே! வேண்டாம் ப்ளீஸ்!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...