Feb 24, 2010

சைபர் கிரைம் - 3

சைபர் கிரைம் குறித்து நான் எழுதும் மூன்றாம் பதிவு இது.

சமீபத்தில் என் ஆர்குட் உள்ளே சென்று பார்த்தபோது அதில் புதியதாய் நான் ஆர்க்குட்டில் சேர்க்காத ஒரு பெண்ணின் படம் மின்னியது. அது ஒரு பெண்ணின் படம் அரைகுறை ஆடையில். அவளுக்கு எதிரே அவள் பெயராகக் குறிப்பிட்டிருந்ததை நான் இங்கு எழுத முடியாது. அங்கு மினுமினுத்த ஒரு scrap அவள் சகோதரியின் அந்தரங்கம் குறித்துப் பேசியது. உடனே எனக்கு எங்கோ மணியடித்தது. ஆஹா...! நம் ஆர்க்குட்டினுள் யாரோ நுழைந்துவிட்டார்களோ என்று. அப்படியே அவளைக் கிளிக்கினேன், கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பெண்ணை என் ஆர்க்குட் அக்கவுண்டில் இருந்து புறம் தள்ளினேன்.

மறுநாள் காலை என் கைப்பேசியில் என் நண்பர் ஒருவரிடமிருந்து தன் ஆர்க்குட் அக்கவுன்ட் யாராலோ கடத்தப்பட்டிருப்பதாக ஒரு குறுந்தகவல். ஓ! அவரா நீர்? என நினைத்துக் கொண்டேன்.  ஆர்க்குட்டுடன் இணைந்த கூகுல் பாஸ்வேர்டும் சேர்ந்து போயிற்று. அதைத் திரும்பப் பெற முயற்சித்த அவரது பிரயத்தனங்கள் உடனடிப் பலனைத் தரவில்லை. இதுவரை என்னாயிற்று எனத் தெரியவில்லை.

என்னைத் தொலைபேசியில் அழைத்து "எனக்கு பயமாயிருக்கு கிரி", என அவர் சொன்னது மட்டும் என் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது. நிஜம்தானே? ஒரு பாஸ்வேர்டுக்குள் கூகுல், ஆர்குட், பிளாக்கர், feedburner, பிகாஸா என என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன. 

ஏதோ ஒரு படத்தில் படம் முடியும் முன் நடிகர் விஷால் ஒரு வசனம் சொல்லி படத்தை முடித்து வைப்பார்.... "ஏதாவது செய்யணும் சார்!" என்று.

சில நேரங்களில் இவைகளில் இருந்து தப்பிக்க "எதாவது செய்யணும்", சில நேரங்களில் "எதாவது செய்யாம இருக்கணும்".

பார்த்து நடந்துக்கங்க.


தொடர்புடைய பதிவுகள்:  சைபர் கிரைம் 

2 comments:

Bhaski said...

Do you mean to say she was added in your friends list without your permission.... That is not possible.

It is possible that her name/photo might have shown up in the recently visited list or you would have received a scrap from her, IF your scrap settings is set to "Allow scaraps from everyone" instead of "Allow scraps from friends or friends of friends".

Modhalla settings a maathu....

Giri Ramasubramanian said...

ஓகே....! இப்போ உனக்கு தெளிவா விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுடுச்சி!
"மறுநாள் காலை என் கைப்பேசியில் என் நண்பர் ஒருவரிடமிருந்து தன் ஆர்க்குட் அக்கவுன்ட் யாராலோ கடத்தப்பட்டிருப்பதாக ஒரு குறுந்தகவல். ஓ! அவரா நீர்? என நினைத்துக் கொண்டேன்...."
means what?. முந்தைய தினம் என் ஆர்குட்டில் தோன்றிய எல்லாமே கடத்தப்பட்ட என் நண்பரின் profile'ல் இருந்து வந்தவை! Got it?

Related Posts Plugin for WordPress, Blogger...