Apr 26, 2010

ஹைடெக் பக்தி

வசந்த் டி.வி.யில் நேற்று சென்னை அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் திருக்குடமுழக்கு ஒளிபரப்பு.



தமிழ்த் தொலைகாட்சிகளின் விதிமீறல் எதிலும் ஈடுபடாமல் வழக்கம்போல இயன்றமட்டும் தப்புத் தப்பாய் உச்சரிப்பில் ஒரு பெண்மணி வர்ணனை கொடுத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தார். தலப்புராணம், சன்னதிகள், கொடிமரம், பலிபீடம் என அனைத்துத் தகவல்களும் விவரிக்கப்பட்டன.

காமெரா மேலும் கீழும் சென்று வந்தவாறே பக்தர்களின் பரவசங்களை பதிவு செய்து காட்டிக் கொண்டிருந்தது. இடையிடையே எஸ்.பி.பி. குரலில் பக்திப்பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஓகே... சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

முகூர்த்த நேரமும் வந்து கோவில் விமானங்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது. திடீரென கோவில் கோபுரத்தின் தலைமீது விர்ரெனப் பறந்து வந்து நின்றது ஒரு ஹெலிகாப்டர். மேலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தொடர்ச்சியாக பூக்கள் உதிர்க்கப்பட்டன. ஆச்சர்யத்தில் பிளந்த என் வாய் மூடிக்கொள்ள நிமிடங்கள் பிடித்தன.

மகளிர் மட்டும் படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வந்தது - TECHNOLOGY HAS IMPROVED SO MUCH .

அடுத்து....

குடமுழக்குப்  புனிதநீர் பெரிய பிளாஸ்டிக் குழாய் மூலமாக கோவில் உள்ளும் வெளியும் நின்றிருந்த பக்தகோடிகள் மீது அதிவேகத்தில் பீய்ச்சியடிக்கப்பட்டது.

காலம் மாறிப்போச்சு சார்!

Image Courtesy: virutcham.com

10 comments:

virutcham said...

//மேலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக தொடர்ச்சியாக பூக்கள் உதிர்க்கப்பட்டன.//

இந்த மாதிரி வெட்டி பந்தா செலவுகள் எல்லாம் கோவில் விழாக்களில் தேவையா ?

பலரும் இதை உதாரணமாக எடுத்து போட்டி போட்டுக் கொண்டு இன்னும் பிரமாதமாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்யும் வாய்ப்பு உள்ளது. எனது கண்டனங்கள். இதுக்கு ஆகும் செலவை கோவில் சேமிப்பில் வைத்தால் பின்னால் அதியாவச்ய தேவைகளுக்கு பின்னால் உபயோகப் படுத்தலாம்.

http://www.virutcham.com

natbas said...

என்னங்க நீங்க, அந்த காலத்துல தேவர்களே விமானத்துல பயணம் பண்ணி இருக்காங்க, நீங்க பூ போடறதையும் தண்ணி தெளிக்கறதையும் பெரிசா சொல்லிக்கிட்டு!
(விருட்சம் சார், ஸாரி!)

virutcham said...

தேவர்கள் பறந்து வந்துடுவாங்க . செலவில்லை. நாம செலவழிச்சு செய்யணுமே. என்னமோ எனக்கு உடன்பாடில்லை. பல கோவில்கள் புனருத்தாரணம் பண்ண முடியாம இருக்கு. பலரும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் அதை செய்யறாங்க. இது மாதிரி அதிகப் படி செலவுகளில் சிலதை பிற கோவில் காரியங்களுக்குக் கூட கொடுத்து உதவலாம்

http://www.virutcham.com

virutcham said...

விருட்சத்தில் வெளியாகி இருக்கும் அகஸ்தீஸ்வரர் பல்லாவரத்திற்கு அருகில் பொழிச்சலூரில் உள்ள கோவில். நீங்கள் பதிவிட்டு இருப்பது வேறு என்று நினைக்கிறேன்

natbas said...

நிச்சயமாக. நீங்கள் சொல்வது குறித்து இரு கருத்துகள் இருக்க இடமே கிடையாது. நாளைக்கு, குடமுழுக்கு செய்து வைக்கிறவர்கள் ஹெலிகாப்டரிலிருந்து கம்பி கட்டி கோபுரத்தின்மேல் இறங்கினாலும் இறங்குவார்கள். இது போன்ற ஸ்டண்டுகளை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்கலாமே!

Giri Ramasubramanian said...

விருட்சம் மற்றும் பாஸ்கர் அவர்களுக்கு,

தங்கள் கருத்துப் பரிமாறல்களுக்கு நன்றி.

விருட்சம் அவர்களுக்கு,
நான் குறிப்பிட்ட கோவில் பொழிச்சலூரில் உள்ளதுதான். தவறுதலாக அனகாபுத்தூர் எனக் குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

Swaminathan said...

@ Giri ,

The photo which was published by you is pertains to Pozhichalur (Agastheeswarar temple) but the story which was mentioned by you is pertains to Anakaputhur (Agastheeswarar temple). So kindly keep updated

Giri Ramasubramanian said...

@ swaminathan

I am bit confused here. Is there a Agasthiswara temple in Anakaputhur? or the newly kudamuzhakku done temple...is it Pozhachalur one only? Can someone clarify?

I wrote what I heard. And when I looked for images on the net, I got this.

Now I could not find any Anakaputhur related agastiswara there...

Swaminathan said...

@ Giri,

The kudamuzhukku was done for Agastheeswara Temple which is in Anakaputhur. For that only Helecopter came and put flowers. And also this news came in Dinamalar. So as far as your blog concern the story is correct and the picture is wrong.

But there is one more Agastheeswara Temple is there at Pozhichalur (which is a very ancient and famous one, and also special for Saneeswara Dhosham - called as Saneeswara Sethram / Vada Thirunallar). So by wrongly u have published this temple photo in your blog.

Since I am residing near of (both) these temples I am aware about this. And both are 4 KM from Pallavaram.

Hope I am not confused :) all on this matter....

Giri Ramasubramanian said...

Thanks for the clear clarity info for a muff like me. Now I removed the picture. If you have Anakaputhur temple picture, pls share it with me. I shall be grateful.

Related Posts Plugin for WordPress, Blogger...