Apr 3, 2011

ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் ஜெயிச்சிட்டோம் நாம ஜெயிச்சிட்டோம்


தொண்ணூற்றியாறு மற்றும் இரண்டாயிரத்து மூன்று - இந்த இரண்டு ஆண்டுகளிலும் நேர்ந்த அவமானத்திற்கு உணர்ச்சிமயப் பழி வாங்கல்!

விமர்சனம் என்ற பெயரால் "போகிற போக்கில்" பேசிச் சென்ற வெட்டி ஜாம்பவான்கள் முகத்தில் கரி!

இருபத்தியிரண்டு ஆண்டுகள் உழன்று சுழன்றவனுக்கு என ஒரு அர்ப்பணம்!

இருபத்தியெட்டு  வருடத்துத் தவம்! நூறுகோடி மக்களின் கனவு! பதினைந்து பேர் இந்த நாற்பத்தி மூன்று நாட்கள் போராடி விளையாடி முடித்து பரிசைத் தந்திருக்கின்றனர் பாரத தேசத்திற்கு!

லங்கைக்கு நேர்ந்தது போல் எளிமையாக அமைந்து விடவில்லை இந்தியாவின் ஃபைனல்ஸ் நோக்கிய பயணம். நியூசிலாந்து தவிர்த்து மற்ற அனைத்து முக்கிய நாடுகளையும் மிச்சம் வைக்காமல் லீக் போட்டிகளிலும், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் பந்தயங்களிலும் சந்தித்து விட்டது இந்தியா.  ஆகவே நாம் ட்ரூ சாம்பியன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க சறுக்கலை திருஷ்டி எனக் கொள்வோம்.

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னரும் சரி, நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் சரி, தோனி சந்தித்த விமர்சனங்களைத் தொகுத்தால் ஒரு டஜன் தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் தயாரிக்கலாம். அத்தனை பேருக்கும் நேற்று தன "கேப்டன் இன்னிங்க்ஸ்" மூலம் பதில் சொன்னார் தோனி. டிவிட்டரில் அவரைப் "பாடியவர்கள்" கூட கண்ணில் சிறுதுளி நீருடன் அவருக்கு "ஓ......" போட்டனர். ஒரு சிறு உதாரணம் கீழே <நன்றி: <http://twitter.com/#!/anbudan_BALA>)


Dear Dhoni, I take back everything I said about you for this one remarkable innings under pressure & apparently out of form :) #WC11Sat Apr 02 17:34:37 via Echofon
இணையத்தில் நண்பர் அன்பர்களின் பதிவுகள் மற்றும் நாளிதழ்களின் கவரேஜ்:


தமிழ் ஓவியம் (இலவச கொத்தனார்)


தினமலர்


தினகரன்

தினத்தந்தி

தினமணி

டைம்ஸ் ஆப் இந்தியா

ஹிந்து 

டெக்கன் க்ரானிகிள்

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்ரிக் இன்போ' உதவியுடன் சில க்ளிக்குகள்:


கடைசியாக.... நம்ம பூனம் பாண்டே தன் வாக்கைக் காப்பாற்றியபோது எடுத்த படம்....

  

2 comments:

natbas said...

சனி நீராடுன்னு சொல்வாங்க...

இப்பதான் அதுக்கு அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டேன்...

என் அறிவுக் கண்ணைத் திறந்த பூனம் அவர்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.

Rathnavel said...

வாழ்த்துக்கள் கிரி.

Related Posts Plugin for WordPress, Blogger...