Apr 12, 2011

தமிழக தேர்தல் - ஒரு சின்னூண்டு சர்வே

இதோ நாளை நாம் அனைவரும் மற்றுமொரு ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். திமுக'வா அதிமுக'வா என பெரிது பெரிதாய் பட்டிமன்றங்கள் வீடெங்கும் வீதியெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நடக்கின்றன.

இந்த வேளையில் என் அலுவலகத்தில் 34 பேரிடம் எடுத்த ஒரு எக்ஸ்ப்ரஸ் சர்வே முடிவுகளை இங்கே வெளியிடுகிறேன்.இதில் திமுக'வுக்குப் பத்து வோட்டா? ரொம்ப ஜாஸ்தி தம்பி என்று சொன்னவர்கள் உண்டு.

இத்தனை மக்கள் விரோத மனப்பான்மையை சம்பாதித்தும் சென்னையிலே எடுத்த இந்த தக்குனூன்டு சர்வே முடிவில் அவர்களுக்கு பத்து ஓட்டு கிடைக்கிறது. அப்படியென்றால் தென் தமிழகத்தில் 2G போன்ற முழுபூசணி விவகாரங்களை வடிவேலு களேபரங்களை முன்னிறுத்தி மறைக்கும் சாமர்த்தியத்தில் எத்தனை ஓட்டுக்கள் கிடைக்கும்? இது என் கேள்வியல்ல அலுவலகத்தில் அதிமுக'விற்கு ஓட்டுப் போட்ட ஒருவரின் சோகக் கேள்வி.

அறிவித்த மற்றும் அறிவிக்காத பவர்-கட்'களால் துயருறும் தென்தமிழகம் இந்த வாய்ப்பை முழுக்கப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதால் ஆளும் அரசுக்குச் சாதகமாக இந்த தேர்தல் முடிவுகள் இருக்கப் போவதில்லை என்பது இன்னொரு அதிமுக அபிமானியின் கருத்து.

எது எப்படியோ, நாளை ஓட்டு. ஒரு மாதத்திற்குப் பின்னர் வோட்டு எண்ணிக்கை. காத்திருப்போம் தோழர்களே. இரட்டை இலை வெல்லட்டும். மீண்டும் தாங்கள் நிறுத்தற்குறியிட்ட (நல்லபல???) கணக்குகளை புதிதாய்த் துவங்கட்டும். ஐந்து வருடங்கள் கழித்து திமுகவிற்குச் சாதகமாக பதிவுகள் எழுதுவோம்.
.
.
.

5 comments:

Jawahar said...

ம்ஹூம்.... சர்வே கிர்வேன்னு சொன்னா சென்சார். எனக்குத் தெரியலை, வேறே யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

http://kgjawarlal.wordpress.com

"ஸஸரிரி" கிரி said...

ஜவஹர் சார்,

ரெம்ப நன்றி. சரி பண்ணிட்டேன்.

jothi said...

அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

"ஸஸரிரி" கிரி said...

ஜோதி,

மிக நீண்ட உங்கள் பரப்புரைக்கு நன்றி. நீங்கள் யார் என்ன என தெளிவாகத் தெரிவித்தால், பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

உங்கள் புரொபைலில் தேடித் பார்த்தேன். நீங்கள் ஒரு அமானுஷ்ய கதாபாத்திரம் என்கிறது அது.

"ஸஸரிரி" கிரி said...

@ ஜோதி

உங்களுக்கு பதில் சொல்றதை விட நான் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நீங்க எழுதினதை ஒரு தனிப் பதிவா நாளைக் காலை வெளியிடறது.

அப்படிப் பண்ணினா என்னைத் தொடர்ந்து தொடரும் ஆறேமுக்கால் கோடி தமிழர்களும் அதைத் தவறாமல் படித்துவிட்டு நல்ல முடிவு எடுத்து ஓட்டு போட வசதியாக இருக்கும்.

தமிழக மக்களின் அறிவுக்கண்ணைத் திறக்கும் பதிவு ஒன்றை வெளியிட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு என் கரம் சிரம் புறம் தாழ்ந்த நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...