Apr 13, 2011

சின்னூண்டு சர்வே சினங்கொண்ட உ.பி.

நேற்று நான் வெளியிட்ட அந்த சின்னூண்டு சர்வேவைப் படித்து சகலநாடியும் துடிக்க ம.து'வின் உ.பி. ஒருவர் காரசாரமாக எழுதிய பின்னூட்டம் இங்கே. அவர் எழுதியதை அவரே இரண்டாம் முறை படித்திருந்தால் அதில் இருந்த முரண்களை அறிந்திருப்பார். அவருக்குப் பதில் சொல்லும் பக்குவம் எனக்கு இல்லாததால் அந்தப் பின்னூட்டத்தை மட்டும் இங்கே வெளியிடுகிறேன்.
அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும் 

இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .

உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ? ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ? அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ? 

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

-ஜோதி
.
.
.

3 comments:

natbas said...

தேர்தல் நாலுமா அதுவுமா ஏங்க சிவப்புக் கண் கறுப்புப் பூனையைக் காட்டி மிரட்டறீங்க? என்ன நடக்குமோன்னு பயம்ம்மா இருக்கு!

jothi said...

அன்பு நண்பர் கிரி அவர்களே , நான் நேற்று உங்களுக்கு எழுதிய கமெண்டை வைத்தே இன்று பதிவுஇட்டு விளம்பரம் தேடிகொண்டிர்கள் , வாழ்த்துக்கள் . நான் சொன்ன கருத்க்களின் உள் ஆழம் தெரியாமல் அல்லது உங்களுக்கு புரிந்து கொள்ளும் திறமை இல்லாததால் , நான் நாகரிகமாய் , மிகவும் கண்ணியமாய் சொல்லிய கருத்திற்கு , மதுவின் உ .பி .என்று மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து உள்ளிர்கலே , உங்களை போன்ற மெத்த படித்த அறிவுஜீவிகளுக்கு இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை , அப்படியே சொன்னாலும் , மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் உங்களுக்கு ஒன்றும் புரிய போவதும் இல்லை , அதனால் ஒன்றும் நடக்க போவதும் இல்லை . எப்படியோ என்னால் அதிக வாக்கு பெற்று இன்று உங்கள் பதிவு இன்றைய பிரபலமானவை பகுதியில் இடம் பிடித்துவிட்டது , இதுபோன்ற மிகவும் மலிவான உங்கள் யோசனை தொடரட்டும் . தொடரரட்டும் உங்கள் பதிவுலக சேவை . இந்த நாட்டிற்கு உங்களைபோன்ற பதிவு எழுதுபவர்கள்தான் தேவை . வாழ்த்துக்கள் .

"ஸஸரிரி" கிரி said...

@ஜோதி

//அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவி// என்றெல்லாம் நேற்று நீங்கள் என்னை நாகரீகமாக இடக்கரட'நக்கல் செய்தது தரம் உயர்ந்த பேச்சு பேசிவிட்டதால், நான் எழுதியது தரம் தாழ்ந்ததாய் உங்களுக்குத் தெரிந்ததில் வியப்பேதும் இல்லை.

எப்படியோ, என் தரத்தைப் புரிந்து கொண்டு விலகியமைக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...